வயலின் வித்தகருக்கு அஞ்சலி
வயலின் மேதை பேராசிரியர் டி.என்.கிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன். மூத்த தலைமுறைக் கலைஞர்களில் எஞ்சியிருந்தவர் அவர் மட்டுமே.
வயலின் இசை மீது எனக்கு ஈர்ப்பு வருவதற்கான முக்கியக் காரணம் அவர்தான். கர்னாடக சங்கீதம் என்றால் அது ஜவ்வு மாதிரி மந்த கதியில் இசைக்கப்படுவது என்று மனதில் இருந்த எண்ணத்தை மாற்றியது திரு கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் ஒரு காசெட்டை கேட்ட போதுதான்.
கல்யாணி ராகத்தில் தியாகராஜர் கீர்த்தனையான "ஏதா உண்ரா" வை அவர் வேகத்துடன் ஸ்வரங்களை பாட, அவருக்கு சற்றும் சளைக்காமல் வயலினில் திரு டி.என்.கிருஷ்ணன் பதிலளித்ததும் வயலின் என்ற இசைக் கருவியின் மீது நாட்டத்தை திருப்பியது. மகனை வயலின் வகுப்புக்கு அனுப்புவதற்கான வித்து இவரிடமிருந்துதான் கிடைத்தது.
அந்த பாடலை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். முழுமையாக கேளுங்கள். கர்னாடக சங்கீதம் அறியாதகவர்களுக்குக் கூட புது அனுபவமாக இருக்கும்.
திருவையாறு தியாகராஜர் விழாவில் அவர் வாசித்த "நகுமோ"
கீழே உள்ள காணொளி மிகவும் முக்கியமானது. கிறிஸ்துமஸ் தினத்தன்றும் அதற்கு முதல் நாளும் அவர் கண்டிப்பாக "ஜிங்கிள் பெல்ஸ்" வாசித்து கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது அவர் வழக்கம்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக இருந்த அவர் மறைவு இன்றைய சமூக சூழலில் பெரும் இழப்பு என்பதை கர்னாடக இசை ரசிகர்கள் அல்லாதவர்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஜிங்கில் பெல்ஸ் கேளுங்கள்
He is 92 now.He is giving a concert at the age of 91 atleast for 2 hrs. I always admire Carnatic artists for sitting straight atleast for 2 hrs.Their commitment n love towards the art is appreciable. I am wondering at their memory.Thank you for posting some good videos.
ReplyDeleteRIP
ReplyDelete