Wednesday, November 11, 2020

யானைக்கு கழுதை மேல்

 


ஜோ பிடேன் ஒரு வழியாக வெற்றி பெற்று விட்டார். மகத்தான, பிரம்மாண்டமான  வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் ஒன்று அமெரிக்க தேர்தல் முறைப்படி Electoral College என்று சொல்லக் கூடிய மாநிலங்களில் வாக்கு மட்டுமல்ல, வாக்காளர்களின் ஓட்டுக்களையும் ட்ரம்பை விட கூடுதலாக பெற்றுள்ளார்.

 ஜோ பிடேன் ஒரு இடதுசாரி கிடையாது. ஒரு வேளை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக பெர்ணி சாண்டர்ஸ் இருந்திருந்தால் அதற்காக மகிழ்ந்திருக்கலாம்.

 ஜோ பிடேன் மீது பெரிய பிரமை எல்லாம் இல்லை. இரண்டு கட்சிகளுமே கார்ப்பரேட்டுகள் நலனை காக்கிற முதலாளித்துவக் கட்சிகள்தான். அந்த பாதையிலிருந்து பிடேனால் விலகிச் செல்ல முடியாது என்பதே யதார்த்தம்.

 ஆனாலும்

 பிடேன் வென்றதில் ஏன் மகிழ்ச்சி?

 மிகச் சரியாக சொல்ல வேண்டுமென்றால் அது ட்ரம்ப்  தோற்றுப் போனதால் உருவாகிற மகிழ்ச்சி.

 ட்ரம்பின் பிரதியாக மோடி இருப்பதால் ட்ரம்ப் தோற்கையில் மோடியும் சேர்ந்தே தோற்றதாக உருவாகும் உணர்வு தருகிற மகிழ்ச்சி.

 மோடி மத உணர்வை உசுப்பேத்துவார் என்றால் ட்ரம்ப் இன உணர்வை வைத்து வெறியேற்றுவார்.

 வெறுப்பரசியலின் அடையாளம் மோடியும் ட்ரம்பும்.

 ட்ரம்பிற்கு நிச்சயம் பிடேன் மேல் என்பதுதான் யதார்த்தம்.



 பெரும்பாலான கருப்பின மக்கள் பிடேனுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை கவனிக்கும் போது வெள்ளையின மக்களில் பெரும்பாலானவர்கள் ட்ரம்பையே ஆதரித்துள்ளனர் என்பதை நாம் கவனிக்க தவறக் கூடாது. அந்த அளவிற்கு ட்ரம்ப வெறியேற்றி வைத்துள்ளார். இந்த உணர்வை மாற்றுவதும் தன்னை நம்பிய கருப்பின மக்களுக்கு நேர்மையாக இருப்பதும் பிடேன் முன் உள்ள பிரதான சவால்கள்.

 துணை ஜனாதிபதி பற்றி தனியே எழுத வேண்டும்.

 பிகு: யானையும் கழுதையும் அந்த இரண்டு அமெரிக்க கட்சிகளின் சின்னங்கள்.

 

பிகு 2 : எழுதி இரண்டு நாட்களாக ட்ராப்டிலேயே இருந்தது.

No comments:

Post a Comment