Sunday, November 8, 2020

இந்தியர்கள் எரித்திருக்க வேண்டும்

 


அந்த நாளை மறக்கவே முடியாது. அரக்கோணத்தில் ஒரு கூட்டம் முடிந்து எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறேன். அலைபேசியில் சார்ஜ் இல்லாததால் இணையத்திற்குள் செல்லவில்லை. வாகன ஓட்டுனருக்கு 500 ரூபாய் அளித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்து கொஞ்சம் இளைப்பாறி விட்டு அலைபேசிக்கும் தெம்பேற்றிய பின்னர் தொலைக்காட்சியை போட்ட பிறகே அந்த அதிர்ச்சி செய்தியை அறிந்து கொண்டேன். நோட்டுக்களை செல்லாது என்று சொல்லி மனிதர்களை செல்லாதாவர்களாக்கிய ஒரு மூடனின் மூடச்செயல் நிகழ்ந்த நாளை மறக்க முடியுமா?

அப்போதே எழுதிய பதிவு இங்கே உள்ளது.

மோடி பின் துக்ளக்




முகமது பின் துக்ளக்கின் வாரிசாக ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்துள்ளார் மோடி. 

என்.டி டிவி தடை விஷயத்தில் பல்டி அடித்தது போல இது விஷயத்திலும் பல்டி அடித்தால் வியப்பில்லை. 

கருப்புப் பணத்திற்கு எதிரான போர் என்று சொன்னாலும் அடிப்படையில் இது சாதாரண மக்களுக்கு எதிரான துல்லியமான தாக்குதல்.

ஏற்கனவே குவிந்துள்ள வேலைகளால் சிரமப்படும் வங்கிகளுக்கு தேவையற்ற பணிச்சுமை. 

கைவசம் உள்ள பணத்தை மாற்றுகிறவரை அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத அவலம்தான் மக்களுக்கு.

கருப்புப் பணம் உள்ளவர்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாகத்தான் வைத்திருப்பார்கள், அவையெல்லாம் இப்போது வெளியே வந்து விடும் என்று நினைத்தால் மோடியைக் காட்டிலும் முட்டாள் யாரும் இருக்க முடியாது. 

கண்டெய்னர்களில் பணத்தை பதுக்கத் தெரிந்த அரசியல் கிரிமினல்களால் அதை சிக்கல் இல்லாமல் மாற்றவும் முடியும். 

வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை,  நிலமாக, நகையாக, பங்குகளாக பதுக்கி வைத்துள்ளவற்றை  எப்படி வெளியே கொண்டு வரப் போகிறார்?

இப்போது இந்த முடிவின் பின்னணியில் வேறு ஏதோ அயோக்கியத்தனத்தை சத்தமில்லாமல் செய்யப் போகிறதா என்ற சந்தேகம்தான் வருகிறது. 

பின் குறிப்பு : தன் கைவசமுள்ள நோட்டுக்களை மாற்ற ஆசான் ஏதாவது வங்கிக்குப் போனால் அவர் வேலையை முதலில் முடித்து அனுப்பி விடுங்கள். இல்லையென்றால் அவர் மீண்டும் "அறம்" கற்றுக் கொடுக்கத் தொடங்கி விடுவார். 

நான்கு வருடங்கள் கடந்து விட்டது. செல்லா நோட்டு விவகாரம் என்பது மகத்தான தோலி என்பது மட்டுமல்ல, அன்று நிலை குலைந்த இந்தியப் பொருளாதாரம் இன்று வ்ரை நிமிரவில்லை. 

வங்கி வரிசைகளில் நின்றவர்கள் இறந்து போனார்கள், பணிச்சுமையின் அழுத்தத்தில் வங்கி ஊழியர்கள் இறந்து போனார்கள்.

கறுப்புப் பணம் என்று பத்து பைசா கூட வரவில்லை. ஆனால் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரை வீதியாக வீதியாக பணத்திற்கு அலைந்தோம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அடையாள மை வைக்கப்பட்டு அசிங்கப் படுத்தப்பட்டனர்.  

காப்பீட்டுப் பிரிமியம் கட்ட முடியாமல் காலாவதியான பாலிசிகள் மூலம் எத்தனை பேர் அந்த பாதுகாப்பை இழந்தனரோ?

திருமணம் வைத்து விட்டு சிரமப்பட்டவர்கள் எத்தனை பேர்!

நாம் பிச்சைக்காரர்களாய் பரிதவித்த போது சேகர் ரெட்டிகளுக்கு பெட்டிகளில் புதிய நோட்டு போனது.

நாம் துன்பத்தில் உழன்ற போது "எல்லையில் நிற்பவர்களை பார்க்கச்"  சொன்னார்கள். எல்லையில் நிற்பவர்கள் தாக்கப்படும் வாய்ப்புள்ளது என்ற உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்து புலாவாமா மரணத்திற்கு காரணமாகி அந்த கொடூரனை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தார்கள்.

நீங்கள் பிச்சைக்காரர்களாகவே அலைய சபிக்கப்பட்டவர்கள் என்று அந்த கொடூரன் நம்மை மீண்டும் அலைய விட்ட அவலம் நிகழ்ந்திருக்காது,

ஐம்பது நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள்" என்று அந்த கொடுங்கோலன் கொடுத்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்தியிருந்தால். 

No comments:

Post a Comment