Sunday, November 8, 2020

மாலன் வயிறெரிவது ஏன்?



நவம்பர் மாதம் 3 ம் தேதி அமெரிக்க தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியவுடன் அதில் கடுப்பான மூத்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலன் ஒரு பதிவெழுதினார். அதற்கு ஒரு எதிர்வினையை உடனே எழுதினேன். இருந்தாலும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்ததும் அதனை பதிவிடலாம் என்று காத்திருந்தேன்.

அப்போது எழுதிய பதிவை அப்படியே பதிவிட்டு கூடுதலாகவும் கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ட்ரம்பு உத்தமனா மாலன்

 பொய்யன், புளுகன், காமுகன், வரி ஏய்ப்புச் செய்தவன், முரடன், மூர்க்கன், இன வெறியன் இவையெல்லாம் டிரம்ப் மீது எதிர்கட்சிகள், ஊடகங்கள் டிரம்ப் மீது நடத்திய  அர்ச்சனைகள்

 இவற்றையெல்லாம் மீறி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டிரம்ப்

 எல்லாக் கருத்துக் கணிப்பும் டிரம்ப்பிற்கு எதிராகவே இருந்தனஆனால் அவை எல்லாம் தவிடு பொடியாகி க் கொண்டிருக்கின்றன  

 மக்களின் வாக்கு (பாப்புலர் வாக்குகள்) டிரம்ப்பிற்கு ஆதரவாக இருக்கிறது. வாக்காளர் பேரவையில் அவருக்கு பெரும்பான்மை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமல் அவர் தோற்கலாம். (Still I hope he will make it)

 ஒன்று தெளிவாகிறதுஊடகங்களில் உள்ளமுற்போக்கு(Libel) சக்திகள் பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள்/விருப்பங்களுக்கு மாறாக தங்கள் கருத்தை ஊடகங்கள் வழியேபொதுப்புத்தியாக கட்டமைக்கிற முயற்சி தொடர்ந்து சில காலமாக நடந்து வருகிறது. இந்திய தேர்தலில் நடந்தது, ஐக்கிய ராஜ்ய  தேர்தலில் நடந்தது.இலங்கையில் நடந்தது. அமெரிக்காவிலும் நடந்தது.

 ஜோ, டிரம்ப் யார் வென்றாலும், தோற்பது ஊடகங்கள்தான்

 மோடிக்கு முட்டு கொடுப்பதால் மோடியின் நண்பர் ட்ரம்புக்கும் முட்டு கொடுக்கிறார் மாலன்.

 தேர்தல் வெற்றி என்பது எந்த மனிதனையும் புனிதனாக்காது. இரண்டு முறை வென்றதாலே மோடியின் குஜராத் ரத்தக் கறை நீங்காது. ராஜ பக்சேக்கள் வெற்றி பெற்றதாலேயே அவர்கள் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் என்பது மாறாது.

 சரி மாலன், ஒரு வேளை உங்களுக்கு மனசாட்சி (கிடையாதுதான்) என்று இருந்தால், சரி அது வேண்டாம், அறிவு இருந்தால் சொல்லுங்கள்

 ட்ரம்ப் பொய்யன் கிடையாதா?
ட்ரம்ப் புளுகன் கிடையாதா?
ட்ரம்ப் முரடன் கிடையாதா?
ட்ரம்ப் காமுகன் கிடையாதா?
ட்ரம்ப் வரி ஏய்ப்பன் கிடையாதா?
ட்ரம்ப் மூர்க்கன் கிடையாதா?
ட்ரம்ப் முட்டாள் கிடையாதா?

 சரி மாலன், என்ன அழகாக இந்திய ஊடகங்கள் மோடிக்கு எதிரான கருத்தை கட்டமைத்ததாக கதை விடுகிறீர்கள்.

 மோடியிடம் விலை போன உங்களைப் போன்ற இந்திய ஊடக வியாபாரிகள்தானே மோடிக்கு ஆதரவான கருத்தை கட்டமைத்தீர்கள்!

 உங்களைப் போன்ற எழுத்து விற்பனையாளர்கள்தானே “எதற்கும் லாயக்கில்லாத ஒரு தற்குறிக்கு” இன்னும் ஒரு பொய்ப்பிம்பம் அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!

 உங்களின் அயோக்கியத்தனத்தை அடுத்தவர் மீது சுமத்துவது இன்னும் பெரிய அயோக்கியத்தனம்!

 சரி இந்த கேள்விக்கு மட்டுமாவது பதில் சொல்லுங்கள்.

 ட்ரம்பிற்கு முட்டு கொடுத்ததற்கு உங்களுக்கு பேமெண்ட் எப்படி?

ரூபாயிலா? டாலரிலா?

 ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார் என்று எழுதிவிட்டார் மாலன்.  (Still I hope he will make it) என்று நம்பிக்கையை வேறு தெரிவித்தார். ஆனாலும் அவர் நினைத்தது நடக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சல் வயதான காலத்தில் இருக்காதா என்ன?

இப்போது சாபமும் கொடுத்து விட்டார்.



இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்ன தெரியுமா?

ஃப்ரான்ஸ் போல, ஆஸ்திரேலியா போல இலங்கை போல அமெரிக்காவும் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க கடவுள் அருள வேண்டுமாம். 

என்ன ஒரு குதர்க்கம் பாருங்கள்!

தீவிரவாத இயக்கங்களுக்கு அருளாசி கிடைத்தது அமெரிக்காவிலிருந்துதான் என்பதை மறைத்து வெறுப்பரசியலை பரப்பும் இழி பிறவியாக எழுதுகிறார் மாலன்.

ட்ரம்பு தோற்றுப் போனதற்கே மாலன் இவ்வளவு புலம்புகிறாரே, நாளை பீகாரில் மோடி வகையறாக்கள் தோற்றுப் போனால் மாரடைப்பே வந்து விடும் போல இருக்கிறதே! 

மாலன் சார், உடம்பை நல்லா பார்த்துக்குங்க . . .

 

No comments:

Post a Comment