இந்தி
திரைப்பட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஒரு உல்லாசக் கப்பலில் பயணிக்கையில்
கையில் சில கிராம் ஹெராயின் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளான். அதுதான் நேற்று முதல்
அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பிரதானமான செய்தி.
அதற்கு
ஒரு இருபது நாட்கள் முன்பாகத்தான் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 3000 கிலோ கிராம்
ஹெரோயின் பிடிபட்டது. அதன் மதிப்பு 21,000 கோடி ரூபாய் என்றும் இந்தியாவில் இதுநாள்
வரை பிடிபட்டதில் மிக அதிக மதிப்புள்ள போதைப் பொருள் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது.
ஷாருக்கான்
மகன் கைதானதைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு செய்தியும் செய்தி ஆய்வுகளும் நடத்தும்
நமது ஊடகங்கள் இந்தியாவின் மிகப் பெரிய போதைப் பொருள் வேட்டை குறித்து அவ்வளவாக கண்டு
கொள்ளவே இல்லை.
என்ன
காரணம்?
3000
கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப் பட்ட முந்த்ரா துறைமுகம் அதானிக்கு சொந்தமானது.
விவாதம்
நடத்தினால் அந்த துறைமுகத்தைப் பற்றி பேச வேண்டும். துறைமுகம், விமான நிலையம் ஆகியவை தனியார் வசம் இருப்பதால் இப்படிப்பட்ட கடத்தல்கள்
நடக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும்
பேச வேண்டும்.
மோடியின்
பெருங்கோடீஸ்வர நண்பர் பற்றி விவாதிக்கும் தைரியம் எந்த ஊடகத்திற்கு உள்ளது?
அதே
நேரம் கைதானது ஒரு கான்தானே! பொதுப்புத்தியில் படிந்துள்ள உளவியலைப் பயன்படுத்தி காசு
பார்க்கலாம்.
பாவம்
ஷாருக்கான்!
மோடியோடு
எடுத்துக் கொண்ட எந்த ஒரு புகைப்படமும் அவருக்கு உதவவில்லை.
அதானியும்
தானும் ஒன்றல்ல என்பதையும் அதற்கான காரணம் என்ன என்பதையும் இந்நேரம் ஷாருக்கான் புரிந்து கொண்டிருப்பார்.
பிகு:
அதானிகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய விளக்கமான
பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.
They call people like shah rukh (who collobarate with evil people like modi, who actively work to destroy shahrukh's own community) as uncle tom. He thought his money would help him get special privilege from modi.
ReplyDeleteHopefully shahrukh's son gets the maximum punishment.