உச்ச
நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள ஒரு தீர்ப்பு மிக முக்கியமானது. பெகாஸஸ் மென்பொருள்
மூலம் உளவு பார்த்த பிரச்சினையில் உண்மைகளை கண்டறிய உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில்
செயல்படக் கூடிய விதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக்குழு ஒன்றை
அமைத்துள்ளது.
மோடி
அரசின் தலையில் ஓங்கி வைத்துள்ள அழுத்தமான
குட்டு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
பெகாஸஸ்
பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் முடங்கினால் கூட கவலையில்லை, ஆனால் அது பற்றி விவாதிக்க
முடியாது என்று முரட்டுத்தனமாக முடிவெடுத்தது.
அதே
முரட்டுத்தனத்தைத்தான் உச்ச நீதிமன்றத்திலும் வெளிப் படுத்தியது. அதுதான் உச்ச நீதிமன்றத்திற்க்லு
அரசின் மீது சந்தேகத்தை எழுப்பி விட்டது.
நாங்கள்
உளவு பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டை அரசு மறுக்கவில்லை. ஆகவே விசாரணைக்குழு அமைக்கிறோம்
என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
ஒவ்வொரு
மனிதரின் அந்தரங்க உரிமை என்பது முக்கியமானது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அதனை
கேள்விக்குறியாக்கக் கூடாது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தன் தவறுகளை மூடி
மறைக்கவோ, தப்பிக்கவோ கூடாது என்றும் சொல்லியுள்ளது.
மக்கள்
வறுமையில் வாடும் சூழலில், வேலையின்மை பெருகி வரும் வேளையில் கோடிக்கணக்கில் செலவு
செய்து சொந்த மக்களையே உளவு பார்க்கும் ஒரு அரசு அவசியமா?
வெட்கம்,
மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருந்தால் இந்த அரசு பதவி விலக வேண்டும். குறைந்த
பட்சம் பில்லாவின் கூட்டாளி ரங்காவாவது ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆனால்
இந்த உளவாளிகள் மானங்கெட்டவர்கள். அதனால் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.
பிகு: ஊடகக்காரர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை
எல்லாம் உளவு பார்க்கிற இந்த ஆட்சியாளர்கள் ஏன் தீவிரவாத சக்திகளின் ஊடுறுவலை மட்டும்
கோட்டை விட்டு இந்திய வீரர்களை பலி கொடுக்கிறார்கள்?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉளவாளியை சொன்னா உனக்கு ஏண்டா எரியுது நாயே? நீ இப்படி கதறனுமம்தான இந்த தலைப்பே வச்சேன். எலும்புத்துண்டு பொறுக்கித் திங்கற நாயெல்லாம் பேசவே கூடாது.
Delete