காலையில் செய்தித்தாளில் முதல் பக்கத்திலேயே
"மோடி சர்வாதிகாரி அல்ல, மிகப் பெரிய ஜனநாயகவாதி. அனைத்து முடிவுகளையும் அனைவரையும் கலந்து பேசி விவாதித்தே எடுக்கிறார்"
என்று அமித் ஷா கதையளந்ததை படிக்கையில் மிகவும் கடுப்பாக இருந்தது, சூடாக ஒரு பதிவு எழுதலாம் என்றுதான் இருந்தேன்.
ஆனால் முற்றிலும் எதிர்பாராத ஒரு எதிர்வினை முற்றிலும் எதிர்பாராத ஒரு நபரிடம் வந்தது.
டென்னிஸ் வீரர் மார்டினா நவ்ரடோலிவா அமித்ஷா சொன்னதை பகிர்ந்த ஒரு ட்விட்டர் பதிவை
"நான் சொல்லப் போகும் அடுத்த ஜோக்"
என்று சொல்லி பகிர்ந்து கொண்டுள்ளார்.
மோடி, அமித் ஷா மானம் சர்வதேச அளவில் கப்பலேறியுள்ளது. எல்லா சமயங்களிலும் எல்லோரும் பொய்களை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா!
பிகு: ஸ்டெஃபி க்ராப் ரசிகராக அவரோடு மார்டினா விளையாடும் போட்டிகளில் மார்டினா தோற்க வேண்டும் என்று விரும்பியுள்ளேன். 1988 ல் முதல் முறையாக ஸ்டெஃபி க்ராப் விம்பிள்டன் போட்டியில் மார்டினாவை தோற்கடித்த போது நண்பர்களுக்கு கட்லெட், காபியெல்லாம் கூட வாங்கிக் கொடுத்துள்ளேன்.
இப்போது அதற்காக வருந்துகிறேன் மார்டினா.
No comments:
Post a Comment