Saturday, October 9, 2021

வெட்டப்பட்ட பிரெட்டுக்கள் கொண்டு . . .

 


சென்ற ஞாயிறு அன்று பகிர்ந்த “பிரெட் கொழுக்கட்டை” பதிவின் தொடர்ச்சி.

 அதைப் பார்க்காதவர்கள் இந்த   இணைப்பில் சென்று  பார்க்கவும்

 வட்டமாக வெட்டிய பிரெட் ஸ்லைஸை கொழுக்கட்டைக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள பகுதி பிரெட்டுகள் கணிசமான அளவிலேயே இருந்தது. கொழுக்கட்டைக்கு பாதி என்றால் மீதியை என்ன செய்வது?

 வீணடிக்க முடியுமா என்ன?

 அதுதான் அன்றைய இரவு உணவானது.

 கேரட்டையும் கொட மிளகாயையும் பொடிப் பொடியாக வெட்டி வென்னீரில் கொஞ்ச நேரம் ஊற வைத்தேன்.

 வாணலியை எடுத்து எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும்

 

வெங்காயம்,

பச்சை மிளகாய்,

கேரட், குட மிளகாய்,

தக்காளி

 ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கினேன். இந்த சமயத்தில் உப்பு சேர்த்துக்கொண்டேன்.

 இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிரெட் துண்டங்களைப் போட்டு நன்றாக கிளறி, எல்லாம் சரியாக கலந்து விட்டதும் கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து எடுத்து விடலாம்.

 








இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

1 comment:

  1. it is usually called 'bread pujia' in north india and is the dish for both break-fast as well as evening snakes.

    ReplyDelete