அரசோடு நேரடியாக மோதத் திராணியற்று அப்பாவி மக்களின் உயிர் குடிக்கும் தீவிரவாத இயக்கங்களின் கோழைத்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காஷ்மீர் மக்களுடைய மிகப் பெரிய பிரச்சினையே அவர்களுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து அநீதி இழைப்பதுதான். காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் விதி விலக்கல்ல. காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த காலம் தொட்டு அந்த மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்களே தவிர அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டதில்லை.
காஷ்மீரில் எப்போதெல்லாம் ஜனநாயகம் ஒடுக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் அப்பாவி மக்களை ராணுவம் வேட்டையாடுகிறதோ, அப்போதெல்லாம் தீவிர வாத இயக்கங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கிறது. இதுதான் யதார்த்தம்.
மாநில அந்தஸ்தை குறைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, சிறப்பு அந்தஸ்தை பறித்து, இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு சமர்ப்பணம் செய்ய வழி வகுத்தது ஆகிய மோடியின் நடவடிக்கைகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.
தீவிரவாதத்தை ஒடுக்கி விட்டோம் என்று 56 இஞ்ச் மார்பனாக காட்டிக் கொள்வது உறைக்குள் பதுங்கியிருந்த துப்பாக்கிகளை தோட்டாக்களை உமிழ வைத்துள்ளது.
காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இல்லாமல் அங்கே அமைதி திரும்பாது. அப்போதுதான் மக்கள் தீவிரவாத இயக்கங்களை புறக்கணிப்பார்கள்.
மோடி அரசு தான் எடுத்த அனைத்து முட்டாள்தன நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
அதுதான் முதல் படி.
மூடரும் முரடருமான மோடி அதை செய்ய மாட்டார் என்பது இன்னொரு துயரமான யதார்த்தம்
No comments:
Post a Comment