Sunday, October 31, 2021

உண்மை வரலாற்றை நாம் பரப்புவோம்.

1921 மலபார் எழுச்சியை இந்திய விடுதலைப் போராட்டம் அல்ல என்று மோடி அரசு சமீபத்தில் அறிவித்தது நினைவிலிருக்கலாம்.

அந்த எழுச்சியில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட விடுதலை வீரர்கள் பற்றி குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது விரிவாக எழுதியுள்ளார்கள்.

காட்டிக் கொடுத்த களங்கமும் மன்னிப்பு கேட்ட கறையும் மட்டுமல்ல சங்கிக் கயவர்கள் உண்மையான போராளிகளின் தியாகத்தை மறைக்கவும் மறுக்கவும்தான் முயல்வார்கள்.

அதற்கு வாய்ப்பில்லாமல் உண்மை வரலாற்றை நாம் பரப்புவோம். 

தோழர் ஷாகுல் ஹமீது அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை பகிர்கிறேன்.






 1922,ஜனவரி 20ம் தேதி...

கேரள மாநிலம், மலப்புறம்-மஞ்சேரி சாலையில், வடக்கு திசையில்.......,

#கோட்டக்குந்நு(கோட்டைக்குன்று)..
மூன்று நாற்காலிகளில் மூன்று பேர், கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்ட நிலையில், கைகள் பின்புறமாக வளைக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு, கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில்... இந்த மூவரில் நடு நாயகமாக, மெலிந்த உடல் வாகோடு நடுத்தர வயது கொண்ட, #வாரியன்குந்நத்து, #குஞ்ஞு #அகமது #ஹாஜி... மற்றொருவர் #செம்ப்றசேரி #தங்ஙள் மூவரையும் பின்னால் நின்று சுட்டுக் கொல்ல தயார் நிலையில் பிரிட்டிஷ் ராணுவம்..

கணீரென்ற குரலில், #வாரியங்குந்நன் என்று அழைக்கப்பட்ட, #குஞ்ஞு #அகமது #ஹாஜி, ஆங்கிலத்தில்:"நீங்கள் கைது செய்யப்பட்டவர்களை, பின்னால் நின்று முதுகில் சுடுவதை நான் அறிவேன்.. ஆனால், இன்று, என்னை, நேருக்கு நேர் நின்று என்னை கொல்ல வேண்டும் நீங்கள்; இந்த மண்ணுக்காக, போராடிய எனது நெஞ்சில், உங்கள் தோட்டாக்கள் துளைப்பதை நான் காண வேண்டும்; அந்த மகிழ்ச்சியோடு நான் மரணமடைய வேண்டும்"என்று கூறினார்!

ராணுவ அதிகாரிகள், மூவரின் கண் கட்டுகளை அவிழ்த்து, கைகளிலும் கால்களிலும் பிணைக்கப்பட்டிருந்த, சங்கிலியையும் எடுத்து விட்டு, நேருக்கு நேராக நின்று, சுட்டு கொன்றனர்; அத்தோடு நிற்கவில்லை பிரிட்டிஷ் ராணுவம்; மூவரின் உயிரற்ற உடல்களை, விறகு, மண்ணெண்ணெய் பயன்படுத்தி எரித்து சாம்பலாக்கி விட்டு, எஞ்சிய எலும்பு துண்டுகளையும், சாம்பலையும் மூட்டையாகக் கட்டி எடுத்துச்சென்று விட்டனர்!ஒரு வேளை, #வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி பெயரில் நினைவுச் சின்னம் எதுவும் எழுந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான்!

இனி.........,
மலப்புறம் பகுதியில், நெல்லுக்குத்து எனும் ஊரில், சக்கிப்பறம்பு என்ற, செல்வச் செழிப்பு மிக்க தறவாட்டில் பிறந்தவர், #குஞ்ஞகமது #ஹாஜி...
இயல்பாகவே, பிரிட்டிஷ் எதிர்ப்பில் திளைத்திருந்த இவரது தந்தையும் குடும்பமும்!

நூற்றுக்கணக்கான ஏக்கர் நில புலன்களும், வணிக நிறுவனங்களும், பிரிட்டிஷ் அரசால் பறி முதல் செய்யப்பட்டு, பெருந்தொகையும் பறிமுதல் செய்ததோடும் தணியவில்லை அவர்களின் வன்மம்!குஞ்ஞகமது ஹாஜியின் குடும்பத்தினர் பலரும், பிரிட்டிஷ் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு, ஹாஜியின் தகப்பனார், சக்கிப்பறம்பன் மொய்தீன் குட்டி ஹாஜி அந்தமானுக்கு நாடுகடத்தப் பட்டார்!இதன் பின்னர், தனது தறவாட்டிலிருந்து குடி பெயர்ந்து, வாரியன்குந்நு எனும் இடத்தில் குடி பெயர்ந்தார்..

மூன்று முறை பம்பாய்/மெக்காவுக்கு குடி பெயர்ந்தார்..

பல முறை, தனது பிறந்த ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை பிரிட்டிஷ் ஆட்சி..

தனது தந்தையார் நாடு கடத்தப்பட்டு, சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட பின்பும், வீறு கொண்டு எழுந்தார்,#வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி..

மலப்புறத்தில், கிலாஃபத் இயக்கத்தின் வழி காட்டியாகவும் தலைவராகவும்,பிரிட்டிஷ் எதிர்ப்பு போராளியாகவும் திகழ்ந்த #ஆலி #முசலியாரோடு இணைந்து பணியாற்றினார்,#வாரியன்குந்நத்து #குஞ்ஞகமது #ஹாஜி...

#ஆலி #முசலியார், 1922-ம் ஆண்டு, கைது செய்யப்பட்டு,1922,பெப்ரவரி மாதம்17ம் தேதி, கோயம்புத்தூர் மத்திய சிறையில் தூக்கிலேற்றி கொல்லப்பட்டார்... (அது தனிப் பதிவாக வரும்)

ஏற நாடு, வள்ளுவநாடு உட்பட 200 கிராமங்களை ஒருங்கிணைத்து, ஏறத்தாழ 750000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை அமைத்து, #மலையாள #ராஜ்ஜியம் என்ற ஒரு நாட்டை,1920ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்21ம் தேதி பிரகடனம் செய்தார்,#குஞ்ஞகமது #ஹாஜி!

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள்,#மலையாள #ராஜ்ஜியம், ஏனைய நாடுகள் போலவே, பாஸ்போர்ட், வரிகள், உளவுத்துறை, Signal Systems,கலெக்டர், அமைச்சர்கள் என்று முழுமையான சுதந்திர நாடாகவே திகழ்ந்தது.
ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின் ராணுவ, உளவுத்துறை, காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மலப்புறத்தில் முகாமிட்டு,1922ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி, தனது தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த நேரம் சுற்றி வளைத்து கைது செய்தனர்,#குஞ்ஞகமது ஹாஜியை....

கைது செய்யப்பட்ட ஹாஜியை, மஞ்சேரிக்கு சங்கிலியால் கட்டி இழுத்து, மேளதாளங்களோடு இழுத்துச் சென்றனர்; போகும் வழியில், அவரது மீசையின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்து சித்திரவதை செய்தே இழுத்துச் சென்றனர்!\

ஜனவரி 13ம் தேதி, மலப்புறம் துக்கிடி, கல்லேரியில் நடைபெற்ற ராணுவ விசாரணையில், #குஞ்ஞகமது #ஹாஜிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

தீர்ப்பு வழங்ப் பட்ட உடனே, முகம் நிறைந்த புன்னகையுடன், ராணுவ விசாரணை அதிகாரிகளிடம்,"பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததற்காக, எங்கள் மண்ணின் விடுதலைக்காக, மரணமடையும் வாய்ப்பை எனக்களித்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக்கு; இரண்டு ரக்அத் தொழுகையை நிறைவேற்ற அனுமதி வேண்டும்" என்றுகேட்டார்!அனுமதி வழங்கப்பட்டு, #வாரியங்குந்நன் ,தனது தொழுகையை நிறைவேற்றினார்.

கைது செய்வதற்கு,சில தினங்களுக்கு முன்னர், ஒரு காவல்துறை அதிகாரி வழியே,கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்; கடிதத்தில்,"போராட்டத்தை கைவிட்டு, சரண் அடைந்தால், கொல்ல மாட்டோம் என்றும், பாதுகாப்பாக, மெக்கா நகருக்கு அனுப்பி வைக்கலாம்"என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது!

கடிதத்தை பார்த்ததும், கடந்த கடவென்று சிரித்துக்கொண்டே,"மெக்கா நகரம் எனக்கு மிகவும் பிடித்தமான இடம் தான்; ஆனால் நான் பிறந்தது, #மெக்காவில் #அல்ல!இந்த #ஏறநாட்டு மண்ணில் பிறந்த நான், இங்கேயே மரணமடைந்து, இந்த மண்ணில் கலந்து விடவேண்டும்!இப்படி எல்லாம் என்னை விலை பேச வேண்டாம்"என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்...

1922ம் ஆண்டு, ஜனவரி 20ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், எரித்து சாம்பலாக்கி, மிச்ச சொச்சங்களைக் கூட விட்டு வைக்காமல் எடுத்துச்சென்று விட்டாலும், இப்போது மலப்புறத்தில் கோட்டைப் புறத்தில், கம்பீரமாக எழுந்து நிற்கிறது, #வாரியன்குந்நத்து குஞ்ஞகமது ஹாஜி நினைவு டவுன் ஹால்...




**சற்று நீளமான பதிவு தான்; ஒரு புத்தகமாக வெளி வர வேண்டிய வரலாற்று தகவல்களை இதை விட சுருக்கமாக எழுதுவது சற்றே கடினம்.
#ShahulHameed..#மீள்

1 comment:

  1. அற்புதமான பதிவு

    ReplyDelete