Sunday, October 17, 2021

“டாக்டர்” பார்க்கலாம்.

 



திரைப்படம் வெளியான முதல் நாளே, திரை அரங்கில் பார்த்த படம். ஆனாலும் எழுத இன்றுதான் அவகாசம் கிடைத்தது.

 லாஜிக் என்பதை மறந்தால் இரண்டரை மணி நேரம் படத்தை சிரித்துப் பார்க்கலாம். நகைச்சுவை நடிப்பின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட சிவ கார்த்திகேயன் படம் முழுக்க சீரியஸாக இருக்க யோகி பாபுவும் உரக்கப் பேசும் இன்னொருவருவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

 பெண் குழந்தைகளை கடத்தும் வில்லன், போலீசுக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் வருவதற்கு முன்பாக அனைவரையும் கடலில் தள்ளி கொன்று விடுவேன் என்று சாம்பிள் காண்பிக்குமளவிற்கு புத்திசாலியாக உள்ளான். ஆனால் கிளைமேக்ஸின் போது கதாநாயகன் வகையறாக்களை கட்டிப் போட்டு விறகு வைத்து எரிக்கும் அளவிற்கு ஏன் முட்டாளாகி விடுகிறான், கையில் உள்ள துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளாமல் இருந்தது ஏனோ?

 கோவா, அதிலும் அந்த தீவு மிக மிக அழகாய் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த தீவுக்கு போய் வர வேண்டும் என்ற உணர்வை உருவாக்குகிறது.

 முகம் சுளிக்க வைக்கும் வசனங்களோ, காட்சிகளோ இல்லாதது ஒரு நல்ல அம்சம்.  அதற்காகவே டாக்டரை பார்க்கலாம் (ஆமாம். இன்னும் அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது அல்லவா!

1 comment:

  1. அவசியம் பார்க்கிறேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete