Wednesday, October 13, 2021

வானம் உனக்கு, பூமியும் உனக்கு? வசனம் மட்டும்

 *நாளொரு கேள்வி: 13.10.2021*

 *இன்று 500 வது நாள் பதிவு*

 இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *.சுவாமிநாதன்*

##########################

 *வானமும் தனியாருக்கு*

*வசனம் மட்டும் மக்களுக்கு*

 கேள்வி: பொதுத் துறை விற்பனையில் ஒன்றிய அரசின் வேகமான நகர்வு "உறுதியான அரசு" என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் மோடி சிலாகித்துள்ளாரே?

 *சுவாமிநாதன்*

 இந்திய விண்வெளி சங்க (ISpA) துவக்க விழாவில் பேசிய பிரதமர், ஏர் இந்தியா விற்பனை உள்ளிட்ட சீர்திருத்தங்களை வேகமாக நகர்த்துவதன் மூலம் இதுவரை இந்தியா பார்த்திராத *"உறுதியான அரசை"* இப்போது காண்கிறது என்று சிலாகித்துள்ளார்

 எது அரசியல் உறுதி பிரதமர் அவர்களே! 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை - டாட்டா, பிர்லா, சிங்கானியா போன்ற பெரு முதலாளிகளிடம் இருந்து பறித்த - 1956 தேசிய மய முடிவும், 1969 இல் இந்திய மக்களின் 85% சேமிப்புகளைக் கொண்ட 14 தனியார் வங்கிகளை தேசிய மயம் ஆக்கியதும் *"அரசியல் உறுதியா?"*

 இல்லை இப்படி உருவான இந்த பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாவற்றையும் தனியார்கள் இடம் தந்து விடுவது *"அரசியல் உறுதியா?"*

 *"பீ கேர் ஃபுல்... என்னை சொன்னேன்"* என்று வடிவேல் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. கார்ப்பரேட்களிடம் உறுதியை காண்பிப்பது துணிச்சலா! கார்ப்பரேட் லாபங்களுக்காக மக்கள் நலனுக்கு உதவி வரும் பொதுத் துறையை காவு கொடுப்பது துணிச்சலா

 பிரதமர் அவர்களேகொஞ்சம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2004-08 காலத்தை திரும்பிப் பாருங்க. அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை பெருமளவு தடுக்கப்பட்ட காலம் அது. காரணம் என்ன? இடதுசாரிகளின் ஆதரவோடு அந்த அரசாங்கம் இருந்ததுதான். அந்த நான்கு ஆண்டுகள் பொதுத் துறையின் பொற்காலம் ஆகும். இப்படி இடதுசாரிகள் இருந்ததால், இருப்பதால் அவர்களுக்கு கார்ப்பரேட் நிதி கிடைக்காது; அது தெரிந்தே சமரசம் இல்லாமல் நின்றார்கள். நிற்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் கொடுத்தாலும் இடதுசாரிகள் வாங்க மாட்டார்கள். பிரதமர் அவர்களே! இதற்கு பெயர்தான் *"அரசியல் உறுதி".*

 பிரதமர் இன்னொன்றும் அதே கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். *"எங்கு அரசு நிறுவனங்கள் தேவை இல்லையோ, அங்கு தனியார்களை அனுமதிக்கிறோம்"* என்று...

 பிரதமரே உங்கள் அமைச்சர் *பியூஷ் கோயல்* இடம் கேட்டு பாருங்க... 25% தடுப்பூசிகளை தனியார்க்கு தந்தீர்களே! மக்கள் உயிர்கள் கொத்து கொத்தாக விழுந்த நேரத்தில் கூட தனியார்கள் ஒழுங்காக தடுப்பூசியை போட்டார்களா? தமிழகத்தில் ஒரு கட்டத்தில் 4 ½ சதவீதம் தான் போட்டுள்ளார்கள் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டவில்லையா? *"சண்டை போட்டு தனியார்கள் தடுப்பூசியை வாங்கினார்கள். நாங்கள் கிராமங்களுக்கெல்லாம் போவோம் என்று உறுதி தந்தார்கள். ஆனால் செய்யவில்லை. பீகார், வட கிழக்கு மாநிலங்கள் எல்லாம் தவிக்கின்றன"* என்று பியூஷ் கோயல் பகிரங்கமாக சொல்லவில்லையா

 *"உறுதியான அரசாங்கம்... பிரதமர்"* என்ன செய்திருக்க வேண்டும்? தனியார்களுக்கு ஒப்படைத்த 25 % தடுப்பூசிகளை ஏன் போடவில்லை? இனி முழுக்க அரசே எடுத்துக் கொள்ளும்! உங்களுக்கான ஒதுக்கீடு ரத்து என்று சொல்லியிருக்க வேண்டாமா? சொன்னீர்களா பிரதமரே!

 உண்மை இவ்வாறிருக்க, அரசு தலையீடு தேவைப்படாத தொழில்களைத்தான் தனியாருக்கு தருகிறோம் என்ற உங்கள் வார்த்தையில் உயிர் இருக்கிறதா பிரதமரே

 பிரதமர் இன்னும் கவர்ச்சிகரமான வாதத்தை அந்த கூட்டத்தில் முன் வைத்திருக்கிறார். *"உலக தொழில் துறையின் சக்தி மிக்க இல்லமாக"* (Global Manufacturing Power House) இந்தியாவை மாற்றுவாராம். அதற்கு அரசு நிறுவனங்களை தனியார்க்கு மாற்றுவாராம். பிரதமரே, "பார்ச்சூன் -500" நிறுவனங்களில் 2005 ல் 43 அரசு நிறுவனங்கள் மட்டுமே இருந்தன; இன்று 2021 ல் எவ்வளவு? 138 அரசு நிறுவனங்கள். *அதில் 95 அரசு நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை.* "இண்டர்நேசனல் பவர் ஹவுஸ்" உருவாக்கப் போகிறேன் என்கிறீர்களே? சீனா இத்தனை அரசு நிறுவனங்களை "பவர் புல்" நிறுவனங்களாக மாற்றி டாப் 500 க்குள் கொண்டு வந்திருக்கிறதே! தனியார் கைகளில் கொடுத்தால்தான் பவர் ஹவுஸ் ஆகுமென்பதற்கு என்ன ஆதாரம் பிரதமரே

 ஏன் இந்தியாவில் அரசு நிறுவனம் ஆக உள்ள *எல்..சி* "மிகப் பெரும் பவர் ஹவுஸ்" ஆக ஏற்கெனவே இருக்கும் போது அதைப் பங்கு விற்பனைக்கு ஆளாக்குவது ஏன்?

 *"எங்கிட்டு போனாலும் கேட்ட போடுறாங்கே"* என்பது மாதிரி உங்கள் வார்த்தைகளுக்கும் நடப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நிரூபணம் ஆகிறதே

 *"அரசு தொழில்களைக் கையாளாது; அது ஆதரவை தரும், அவ்வளவுதான்"* (Government plays the role of an enabler and not handler) என்று அரசின் கொள்கையை விளக்கியுள்ளார். தனியார்கள் கையாளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்களா? யெஸ் பாங்க் விழுந்த போது ஸ்டேட் பாங்க் ஓடிப் போய் கை கொடுத்ததேஅந்த நிகழ்வு தந்த செய்தி என்ன? *அரசு கையாள முடிந்தாலும், கையாள அனுமதிக்க மாட்டோம், தனியார் கையாலாகாதவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கொடுப்போம், அப்புறம் ஓடிப் போய் கை கொடுப்போம் என்கிறீர்களா?*

 *. டி. பி. * வங்கி நட்டத்தில் சிக்கிய போது எல்..சி அதன் பங்குகளை வாங்கி அதற்கு வலு சேர்த்தது. இவ்வாண்டு .டி. பி. லாபகரமான செயல்பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் எல்..சி யின் .டி. பி. பங்குகள் இப்போது விற்கப்பட்டு விடும் என்கிறார்கள். *நட்டம் என்றால் அரசு கை கொடுக்கும், லாபம் என்றால் தனியாருக்கு கை மாற்றும்* என்ற பார்முலா "நல்ல டீல் தானா" பிரதமரே!

 கடைசியில் பிரதமர் விசயத்திற்கு வந்து விட்டார். *"விண்வெளி என்றால் அரசு என்றுதான் இது நாள் வரை இருந்திருக்கிறது. இந்த அரசு அந்த மனோபாவத்தை மாற்றும்"* என்கிறார்.

 வானத்திற்கு கீழே உள்ள எல்லாம் தனியாருக்கு என்பது மட்டும் அல்ல; வானமே தனியாருக்கு என்கிறது அரசாங்கம்

 இதற்கு பெயர் உறுதியான அரசாங்கமாம். *இன்னுமாடா இந்த ஊர் நம்மள நம்புது* என்ற கதைதான்

 *செவ்வானம்*

2 comments: