விளையாட்டாக
மட்டும் பார்க்காததால்தான் . . . . .
சங்கிகள்
ஏதோ அவர்கள் வீட்டில் எழவு விழுந்தது போல இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின்
அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதன் விளைவு அது.
அதுவும்
நேற்று மத்யமர் குழுவில் பல பதிவுகளை படிக்க மிகவும் காமெடியாக இருந்தது. இந்த படங்கள் போலத்தான்.
இந்தியா கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை,
பாகிஸ்தானை வென்றால் போதும்.
இந்தியா இன்று வெல்வது மோடிக்கு பெருமை.
பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டிட இந்தியா
பாகிஸ்தானை தோற்க வேண்டும்.
இந்தியாவின் மானமே பாகிஸ்தானை வெல்வதில்தான்
உள்ளது.
இப்படியெல்லாம்
நேற்று எழுதியவர்கள் போட்டி முடிவுக்குப் பின்பு என்ன எழுதியுள்ளார்கள் என்று பார்த்தால்
நேற்று எழுதிய சுவடே தெரியாமல் அழித்திருந்தார்கள். மிகவும் அசிங்கமாகி விட்டது போல.
முக
நூலில் எழுதியவர்களுக்கே இப்படி ஒரு எமோஷன் என்றால் பூஜை செய்தவர்களின் நிலை?
விளையாட்டை
விளையாட்டாக மட்டும் பார்த்தால் இப்படி ஒரு வெறி வராது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின்
அணி வெற்றி பெறுவது இந்தியாவின் வெற்றி அல்ல. ஹாக்கியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்களே, அதுதான் இந்தியாவின் வெற்றி. பி.வி.சிந்துவும்
நீரஜ் வர்மாவும் மற்றவர்களும் வென்ற பதக்க்கங்கள்தான்
இந்தியாவின் வெற்றிகள்தான். கிரிக்கெட் வாரியம் எந்த விதத்திலும் இந்திய அரசுக்குக்
கட்டுப்படாதது.
அப்படி
இருக்கையில் பாகிஸ்தானுடான பகையை கிரிக்கெட் போட்டியில் காண்பிப்பது என்பது சிறுபிள்ளைத்தனமன்றி
வேறில்லை.
பாகிஸ்தானுடனான
பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான இடம் பேச்சுவார்த்தை மேஜையே அன்றி, நிச்சயமாக போர்க்களம்
கூட அல்ல எனும் போது அது எப்படி கிரிக்கெட்
மைதானமாக இருக்க முடியும்!
இந்த
புரிதல் மக்கள் மனதில் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் வெறி ஏற்றுகிறார்கள். இந்தத்
தோல்வி சங்கிகளின் வெறியை இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் கவலை அளிக்கிறது.
அதனால்
விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்பதை நாம் உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
தேச பக்தியை கிரிக்கெட்டில் தேடாதீர் . .
சரியான பார்வை
ReplyDeleteபேசிப்பேசியே எத்தனை மேஜையைப் பார்த்திருப்பார்கள்?
ReplyDelete