இந்த வாரம் பார்த்த இரண்டு புகைப்படங்கள்.
டெல்லியில்
காந்தி ஜெயந்தி நிகழ்வுக்காக வைக்கப்பட்ட பேனர் அது. மோடியின் புகைப்படம் இருக்கிறது.
ராஜ்நாத் சிங்கின் புகைப்படம் உள்ளது. ஆனால் மகாத்மா காந்தி?????
உற்று
நோக்கினால் ஒரு மெல்லிய படத்தை பார்க்கலாம், அதிலும் காந்தி புற முதுகு காண்பித்து
செல்வது போல இருக்கும்.
அடுத்த
படத்தின் கதையே தனி
நிகழ்ச்சியில்
பங்கேற்கப் போவதென்னவோ துணை ஜனாதிபதி வெங்காய நாயுடுதான். ஆனால் பேனர் என்னமோ நரேந்திர
மோடிக்குத்தான்.
இப்படி
சம்பந்தமே இல்லாமல் நரேந்திர மோடியின் படத்தை பேனர்களில் வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்
வெட்கமில்லை. இந்த விளம்பரங்களை எல்லாம் இளித்த முகத்தோடு ஏற்கும் மோடிக்கும் வெட்கமில்லை.
“திருமண
வீடாக இருந்தால் நான்தான் மாப்பிள்ளை. எழவு
வீடாக இருந்தால் நான்தான் பிணம்”
என்ற
மன நிலையில் மோடி இருப்பதை அவரது ஆதரவாளர்கள் புரிந்து கொண்டதால்தான் “எதிலும் மோடி,
எங்கேயும் மோடி” என்று அவர் புகைப்படத்தை வைக்கிறார்கள்.
நாளை
யாருக்காவது இறுதி ஊர்வலம் என்றால் சவப்பெட்டி ஏந்திச்செல்லும் வாகனத்தின் முகப்பில்
இறந்து போன மனிதனின் புகைப்படத்தை வைப்பதற்குப் பதிலாக மோடியின் புகைப்படத்தை வைக்காமல்
இருந்தால் சரி.
இதெல்லாம் ஓவர் நக்கல் பாஸ்
ReplyDelete