Sunday, October 31, 2021

"வட போச்சே" அண்ணாமலை

 


மகாவீர் தொடர்புடைய ஏதோ ஒரு நாளை முன்னிட்டு நவம்பர் நான்காம் தேதி சென்னையில்  இறைச்சிக் கடைகள் திறந்திருக்கக் கூடாது. பதப்படுத்தப் பட்ட இறைச்சி கூட விற்கப்படக் கூடாது என்று சென்னை மாநகராட்சி ஒரு ஆணை வெளியிட்டது. அந்த நாள்தான் தீபாவளி என்பதையும் பெரும்பாலானவர்கள் அன்று கண்டிப்பாக தங்கள் உணவில் இறைச்சி பயன்படுத்துவார்கள் என்பது ஆணையிட்ட அதிகாரிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் அப்படி வெளியிட்டார் என்றால் அவர் அதிகாரி எனும் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கி என்றே அர்த்தம். 

சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு வந்ததும் அந்த ஆணை அமலாக்கப்படாது என்று இறைச்சி விற்பனை எப்போதும் போல நடக்கும் என்றும் தமிழ்நாட்டு அரசு அறிவித்து விட்டது.

ஒரு பண்டிகையின் இயல்பான மரபை பாதிப்பது போல ஒரு ஆணை வருகிறது. அதனை ஆட்டுக்காரர் ஏன் எதிர்க்கவில்லை? ஒரு ஜைனப் பண்டிகைக்காக இந்து பண்டிகை பாதிக்கப்படலாமா என்று ஏன் குரல் கொடுக்கவில்லை? எச்.ராசா போன்ற பரம்பரை சங்கிகள் கூட வாய் திறக்கவே இல்லை.  மத்யமர் போன்ற சங்கிக் குழுக்களில் கூட யாரும் இது பற்றி எழுதவே இல்லை. 

திமுகவை திட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை இவர்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?

ஆட்டுக்காரர் முதலில் கண்டித்திருந்தால், என் மிரட்டலால்தான் மாநில அரசு அடி பணிந்தது என்று பீற்றிக் கொண்டிருக்கலாமே! 

ஏன் நழுவ விட்டார்கள்?

இங்கேதான் அவர்களின் உண்மை முகம் வெளிப்படுகிறது. மூடத்தனமாக பாஜகவை ஆதரிக்கும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பதற்காக பாஜககாரர்கள் தங்களுக்கு படியளிக்கும் மார்வாடிகளுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.

மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அவர்கள் கோட்பாட்டின் படி இறைச்சி உணவு என்பது அவர்களுக்கு ஒவ்வாது.

அதனால்தான் தீபாவளி அன்று நீ கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று அலட்சியப்படுத்தினார்கள்.

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

சங்கிகள் அவர்கள் நம்மவர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல. 


No comments:

Post a Comment