Thursday, October 14, 2021

துர்கைக்கு கோபம் வராதா?

 


கீழே உள்ள பாடலை தஞ்சைத் தோழர் களப்பிரனின் பக்கத்தில்தான் முதலில் பார்த்தேன்.

துர்க்கையை வழிபடுவதற்காக ஒரு புதிய பாடலை உருவாக்கியுள்ளார்கள். உஷா உதுப் பாடியுள்ளார். 

அந்த பாட்டு இளையராஜாவின் ஒரு ஹிட் பாடலை அப்படியே நகலெடுத்து வார்த்தைகளை மற்றும் பெங்காலியில் போட்டுள்ளார்கள். ராஜாவின் பாடல் என்று முதலிலேயே எழுத்து போட்டு விட்டார்கள் என்பது வேறு விஷயம்.

அது என்ன பாட்டு?

நீங்களே பாருங்கள் . . .



சூரியன் படத்தில் கந்த சஷ்டி கவசத்தின் மெட்டில் ஒரு கவர்ச்சிப் பாடலை உருவாக்கியதற்காக தேவாவுக்கு செம பாட்டு விழுந்தது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள் என்று அப்போதும் குரல் வந்தது.

இப்போது பலான பாடல் பக்திப் பாடலாகி உள்ளது. இப்போது பக்தர்களின் உணர்வுகள் புண்படாதா? 

சரி, அதை விடுங்கள்.

"என்னை வைத்து இப்படி காமெடி செய்து விட்டீர்களே" என்று துர்க்கை அன்னைக்கே கோபம் வராதா?

"அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்" என்ற பராசக்தி வசனம் முந்தைய வாக்கியத்தை தட்டச்சும் போதே நினைவுக்கு வந்து விட்டது. 

பிகு: தோழர் களப்பிரன் பக்கத்தில் பார்த்த ஒரு கமெண்ட்

இந்த பாடலில் பத்து குயிலிகள் நடனம் ஆடியுள்ளார்களே!

No comments:

Post a Comment