புளிச்ச மாவு ஆஜான் சுயமோகன் புகைவண்டியில் பயணம் செல்கையில் லேப்டாப்பை மறந்து இறங்கிப் போயுள்ளார். அதனை பத்திரப்படுத்தி அவரிடம் சேர்த்துள்ளது ரயில்வே நிர்வாகம். அதனை ட்விட்டரிலும் பகிர்ந்து கோண்டுள்ளது.
அந்த ட்விட்டர் செய்தி ஆஜானின் அல்லக்கை ஒருவருக்கு அளவற்ற கோபத்தை உருவாக்கி விட்டது.
அடப்பாவிகளா, உங்களுக்கு வேண்டுமானால் அவர் பெரிய, ஆகச் சிறந்த, முதன்மையான எழவெடுத்த எழுத்தாளராக இருக்கலாம். எல்லோருக்கும் அப்படியா?இந்த எழுத்தாளர் கிரீடத்தை எல்லா நேரமும் அணிந்து கொண்டு திரிந்ததால்தான் புளிச்ச மாவை கடைக்காரர் மனைவியின் முகத்தின் மீது வீசும் திமிர் வந்தது. அந்த திமிருக்கு வாங்கிக் கட்டிக்கொண்ட பின்பும் திருந்தவில்லை.
இங்கே கூட இவர்தான் லேப்டாப்பை மறந்து வைத்து விட்டார். அதை பொறுப்போடு ஒப்படைத்தவர்களை பாராட்ட மனமில்லை. எழுத்தாளர் என்று வர்ணிக்காதது தடித்தனமாம். உண்மையில் இதுதான் தடித்தனம்.
அல்லக்கைகளுக்கும் சரி, குரு மகா சன்னிதானத்திற்கும் சரி, எதிர்பார்ப்பெல்லாம் ரொம்பவே ஓவர்தான் . . .
No comments:
Post a Comment