ஹோமம் வளர்த்தார்கள்,
கங்கையில் பாலை ஊற்றினார்கள்.
கோயில்களில் பூஜை நடத்தினார்கள்.
முக நூலிலும் ட்விட்டரிலும் கூட
பிரார்த்தனை செய்தார்கள்.
தங்கள் வாழ்வின் எதிர்காலத்தையே
இந்த ஒரே ஒரு போட்டிதான்
தீர்மானிக்கும் என்பது போல
வெறியோடு திரிந்தார்கள்.
இருப்பினும் கூட அவர்கள் வழிபட்ட அவர்களின் கடவுள் கூட அருள் பாலிக்காமல் ரசிகராக ஆட்டத்தை மட்டும் ரசிக்க வெறியர்களின் கோபம் அணியின் மீது திரும்பவில்லை, அணித்தலைவர் மீது திரும்பவில்லை. ஒரே ஒரு வீரரை மட்டும் குறி வைத்து தாக்குகிறார்கள். அதுவும் கூட அவர் மதத்தை வைத்துத்தான். பாகிஸ்தானுக்கு போ என்று வசை பாடுகிறார்கள்.
ஏற்கனவே இங்கே எதுவும் சுகமில்லை.
விவசாயிகள் போராட்டம் ஒரு வருடத்தை நோக்கி.
தொழிலாளர்
நலச் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்பட்டு விட்டன.
மக்களின்
வியர்வையால் உருவான பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது.
அவர்கள்
வாங்கிய கடன்கள் வாராக்கடனாக மாறி தள்ளுபடியும் செய்யப் படுகிறது.
விலைவாசி
உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட் ரோல், டீசல் விலை சாதனை அளவான செஞ்சுரியையும் கடந்து
விட்டது.
மாட்டின்
பெயரால் கொலை,
மதத்தின்
பெயரால் கொலை
ஜனநாயகம்
என்பதற்கு மதிப்பில்லை.
மொழித்திணிப்பு.
மாநிலங்களுக்கு
உரிய நிதி ஏய்க்கப்படுகிறது.
பொய்யும் ஆணவமும் அடிப்படைவாதமும் வெறியும் தலை விரித்தாடும் இந்த நாட்டில் வாழ்வதை விட
எத்தனை கோடி சிக்கல்கள் உள்ள நாடாக இருந்தாலும் இவர்களின் சித்திரவதைகளை அனுபவிப்பதற்கு பதிலாக
பாகிஸ்தான் செல்வதே மேல்
என்று சொல்ல வைக்காதீர்
மிஸ்டர் மோடி மற்றும் அவரது குண்டரடிப் பொடிகளே!
No comments:
Post a Comment