Wednesday, October 27, 2021

இந்தி தெரியாது போடா, கர்னாடகத்திலும்

 

இந்தி உங்களின் தாய் மொழி...*   *எங்களுடையது அல்ல*

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் பதிவு. “இந்தி தெரியாது போடா என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டார்கள் போல.

 *நாளொரு கேள்வி: 26.10.2021* 

 தொடர் எண்: *513*

 இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு. வெங்கடேசன்* (சி.பி.எம்)

##########################

 *இந்தி உங்களின் தாய் மொழி...*

 *எங்களுடையது அல்ல*

 

கேள்வி: அண்மைக் காலமாக இந்தித் திணிப்பிற்கான முயற்சிகள், கருத்துக்கள் அதிகம் வருகிறதே!

 

*சு. வெங்கடேசன்*

 

ஆம். அதற்கான எதிர் வினைகள் எழுவதும் அதிகரித்திருப்பது மகிழ்வை தருகிறது. அதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்கிறது

 

அண்மையில் இந்திய தணிக்கையாளர் கழக தலைவர் *ஜம்பு சாரியா* _"தாய் மொழியான இந்தியின் ஆற்றலை உணர்ந்து அதை இந்திய தணிக்கையாளர் கழகம் தனது பணிக் கலாச்சாரத்தில் இணைத்து மேம்படுத்த வேண்டும்"_ என்று அக் கழகத்தின் *"தி சார்டர்ட் அக்கவுன்டன்ட்"* இதழில் எழுதியுள்ளார். அக் கழகத்தின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று ஒரு கடிதம் ஒன்றை உடனே அனுப்பினேன்

 

திரு ஜம்பு சாரியா அவர்களே, உங்கள் கூற்று அதிர்ச்சியை தருகிறது. *இந்தியாவில் 19500 மொழிகள் உள்ளன. 32 மொழிகள் 10 லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக, மேலும் 28 மொழிகள் ஒரு லட்சம் பேருக்கு மேலானவர்களின் சொந்த மொழியாக உள்ளது. இந்தி எல்லாருக்குமான தாய் மொழி அல்ல. உங்கள் கழகத்தில் உள்ள எல்லா தணிக்கையாளர்களுக்குமான தாய் மொழியும் அல்ல. உங்கள் கழகத்தின் சேவையைப் பயன்படுத்துகிறவர்கள் எல்லாருக்குமானதும் அல்ல. ஆகவே உங்கள் கூற்று உண்மையும் அல்ல. இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்துவத்திற்கும் எதிரானது.*

 

மேலும் உங்கள் நிறுவனம் நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்ட நெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உடையது. *பிராந்திய மொழிகள் என்ற தலைப்பிலான பிரிவுகள் 345, 346 படித்து பாருங்கள்.* இந்தி பேசாத மாநிலங்கள் மீது அதை திணிக்க முடியாது. மாநில சட்ட மன்றங்கள் ஆங்கிலம் தொடர வேண்டும் என்று சொல்கிற வரை ஒன்றிய அரசுத் துறைகள், அதன் தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்த முடியாது. இந்திய அரசியல் சாசனம் 8 வது அட்டவணை 22 மொழிகளை அங்கீகரித்து இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஆகவே உங்கள் கழகமும் சட்டத்திற்கு உட்பட்டு *தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.* சட்டத்திற்கு விரோதமான அணுகுமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்

 

*2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே  இந்தியை சொந்த மொழியாக கொண்டவர்கள் 39 % பேரே.*

 

திரு ஜம்புசாரியா! இந்தி உங்களின் தாய் மொழியாக இருக்கலாம். அதன் மீது உங்களுக்கு அளவற்ற பற்று இருக்கலாம். எனது தாய் மொழி தமிழ். *எனக்கு என் தாய் மொழியின் மீது உள்ள பற்று உங்களை விட அதிகமானது.* எனக்கு மட்டுமல்ல உங்களின் தணிக்கை முடிவுகளை நம்பி பயன்படுத்துகிற ஒவ்வொரு குடி மக்களுக்கும் அவரவர் தாய் மொழி மீது அளவற்ற பற்று உண்டு. உங்கள் கூற்று இந்தி பேசாத பேசாத மாநிலங்களை சேர்ந்த கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது ஆகும்

 

ஆகவே உங்கள் "தாய் மொழி" கருத்து திரும்பப் பெறப்பட வேண்டும். அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டு உங்கள் கழகத்தின் மொழிப் பயன்பாடு அமைய

வேண்டும்

 

தமிழகம் என்றும் இந்தித் திணிப்பை அனுமதிக்காது என்று எழுதி இருந்தேன்

 

இன்று திரு ஜம்புசாரியா அவர்களின் பதில் இந்து பிசினஸ் லைன் உள்ளிட்ட முன்னணி இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது

 

*இந்தியை திணிக்க நினைக்கவில்லை - இந்திய தணிக்கையாளர் சங்கத் தலைவர்.* 

 

இது ஊடகத் தலைப்புகளில் ஒன்று. "இந்தி நம் தாய் மொழி" என்ற அவரின் கூற்றுக்கு எதிரான நமது எதிர்வினைகளுக்கு கிடைத்த வெற்றி இது. தமிழ்நாடு எதிர்வினைகளில் முன் நின்றது எனும் செய்தியேடுகளின் கருத்தும் நமக்கு பெருமை அளிக்கிறது.

 

*இரயில்வே* மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டுமே பயிற்சி என்பதற்கு நான் தெரிவித்த எதிர்ப்பின் அடிப்படையில் ஆங்கிலப் பயிற்சிக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே *அஞ்சல்* படிவங்கள் தமிழில் இல்லை என்பது குறித்து ஆற்றிய எதிர் வினையால் தமிழ் படிவங்கள் உடனே நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

இப்படி மீறல்களுக்கான எதிர் வினைகளும், மக்களின் கவன ஈர்ப்பும் ஒருங்கே அரங்கேறுகின்றன. நமது விழிப்பே இந்தித் திணிப்பை தடுத்து நிறுத்தும்

 

*செவ்வானம்*

இந்த பதிவை பகிரும் வேளையில்தான் நேற்று முகநூலில் எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் எழுதியது நினைவில் வந்தது. அந்த பதிவு இங்கே.


போனவாரம் தமிழ் நாட்டில் Zomato இன்று கர்நாடகாவில் kfc புறக்கணிப்போம்.

Kfc ஹாலில் இந்தி பாட்டுகள் மட்டும் வைக்கிரீர்களே கன்னட பாடல்களையும் வையுங்கள் என்று கேட்டதற்கு ஒரு மூடன் இந்திதானே தேசிய மொழி என்று பதில் சொல்லி மறுத்து இருக்கிறான்.

கர்நாடகாவில் இணையம் முழுவதும் kfc யை புறக்கணிப்போம் என்று வைரல் ஆகி வருகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கிராமப்புற மேல் சாதி நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் இருந்த வரை இன உணர்வு பெரிய அளவுக்கு வளரவில்லை.

இப்போது நகர மயம் அதிகரிக்க அதிகரிக்க, படிப்பறிவு அதிகரிக்க மேலும் மேலும் தேசிய இனங்கள் விழித்து எழுந்து வருகின்றன.

கார்ப்பரேட் கொள்ளைக்கு நகரமயம் ஊக்குவிக்க படுகிறது. ஆனால் கூடவே இன உணர்வும் வளர்கிறது.

கார்ப்பரேட் உள்ளூர் மொழியில் தொடர்பு கொள்ள தயாரகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்து, இந்தி, இந்தியா என்ற பித்து இருக்கிறது இல்லையா அதை திருப்திப் படுத்த இந்தி ஆதரவு நிலை எடுக்கிறார்கள் போலிருக்கிறது.

கன்னட சகோதரர் களுடன் இணைந்து நிற்போம்.

 

 

No comments:

Post a Comment