Monday, October 5, 2020

மாலன் பேமெண்ட்டை கட் செய்யுங்கஜி

 


லாஜிக்கே இல்லையே மாலன்?

 மாலன் பேமெண்ட்டை கட் செய்யுங்கஜி

 மூமூமூமூமூமூமூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலனின் முக நூல் பதிவு இது. கேள்வி பதிலாம்!

 அவரது பதில் நீல நிறத்திலும் என்னுடைய கருத்து சிவப்பு நிறத்திலும் உள்ளது.

 ஆறு வருட மத்திய பிஜேபி அரசின் மீது நீங்கள் வைக்கும் விமர்சனம் என்ன?

drjkrtnj@gmail.com

 வியப்பது: வாக்குக்காக சிந்திக்காமல் வழக்கத்திற்கு மாறாக சிந்திப்பது.

 தன்னை பதவியில் அமர வைத்த அதானி, அம்பானி நலமே முக்கியம் என்று எப்போதும் ஜிந்திப்பது, செயல்படுவது. வாக்களித்த மக்களின் நலனை ராசாவின் ஹைகோர்ட்டாக கருதுவது.

 திகைப்பது:தனியார்மயம் தவிர்க்க இயலாதது என்பதை சோஷலிசக் கனவுகளில் சுகம் கண்டவர்களுக்கு எடுத்துச் சொல்லி  அரண்டு போனவர்களை அவரவணைத்துக் கூட்டிப் போக முயலாதது .

 ஜரிகை வேட்டிக்கான கனவில் இருந்தவனின் இடுப்பில் இருந்த ஒற்றை ஆடையைக் களவாடி அவனை நிர்வாணமாக்கி, நீ இப்போதுதான் என்னைப் போல பதினைந்து லட்ச ரூபாய் ஆடை அணிந்துள்ளாய் என்று சொல்லாததால் திகைப்பா மாலன்?

 தன்னால் ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட உருவாக்கும் யோக்கியதை இல்லாததால் ஏற்கனவே மக்களின் வியர்வையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது. தமிழக அரசு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு வைப்பது போல பொதுத்துறை நிறுவனங்களையும் இலக்கு வைத்து சீரழிப்பதுதான் நடக்கிறது. இந்த கேவலத்திற்கு முட்டு கொடுக்க வைக்கும் உங்கள் பேமெண்ட் வெறி திகைக்க வைக்கிறது மாலன்.

 பிரமிப்பது: உயர்மட்டத்தில் குறைந்த ஊழல்.. அடிமட்டத்தில் அதிகரித்த அலட்டல்

 இரண்டும் இரண்டு மட்டங்களிலும் அதிகமாக இருப்பதைச் சொன்னால் பேமெண்டுக்கு சிக்கல் என்பதால் அடக்கி வாசிக்கும் மாலனின் கயமைத்தனம் பிரமிக்க வைக்கிறது.

 ரசிப்பது: நினைத்ததை நடத்தியே முடிக்கும் வேகம்.

 மக்களைப் பற்றியோ, ஜனநாயகத்தைப் பற்றியோ, மரபுகளைப் பற்றியோ, தீய பின் விளைவுகளைப் பற்றியோ மோடிக்கும் கவலை இல்லை. காவித்தரகர் மாலனுக்கும் கவலையில்லை. வேகம்டா . . .

 வெறுப்பது: அமைச்சர்கள் உள்பட பலர் அவ்வப்போது உதிர்க்கும் அபத்தப் பேச்சுக்கள்.

 மிஸ்டர் மாலன், அந்த ‘பிரதம” என்ற வார்த்தை டைப்பிங்கில் விடுபட்டு விட்டதா?

 சுருக்கமாக: இது காகிதப்படகில் சாகசப் பயணம். ஆனால் கரை சேர்த்துவிடுவார்கள்.

 காகிதப்படகில எப்படிய்யா கரை சேர முடியும்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா மாலா? இந்த எழவெடுத்தவனுங்க மூழ்கிப் போனா பரவாயில்லை, நாடு இல்லை மூழ்கிக் கிட்டு கிடக்கு.

 இது சங்கிகளின் குரங்குக் குளியல்

 நம்ம கிட்டு துட்டு வாங்கிக்கிட்டு என்ன தைரியம் இருந்தா நம்ம ஆட்சியை காகிதப் படகுன்னு சொல்வாரு அந்த ஆளு! தேசத்துரோகி! அந்தாள்  பேமெண்டை கட் செய்யுங்கஜி!

 

1 comment:

  1. உங்க கிட்டு மாட்டிக்கிட்டு மாலன் படாத பாடு படறார். அவரை வேறுயாரும் பொருட்படுத்துவதே இல்லை

    ReplyDelete