"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, தான் விழுமாம் கழுநீர்ப்பானைக்குள்ள"
என்ற கதையாக
நீதி, நேர்மை, நியாயம், வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் எப்போதும் கதை அளக்கும் குடியரசு டிவி அர்ணாபு செய்த ஊழல் முறைகேடு இப்போது அம்பலமாகி உள்ளது.
டி.ஆர்.பி ரேட்டிங் எப்படி கணக்கிடப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
தொலைக்காட்சிகள், விளம்பர ஏஜென்சிகள், விளம்பர நிறுவனங்கள், ஆகியோரின் அமைப்பான BROADCAST AUDIENCE RESEARCH COUNCIL என்றை அமைப்பின் ஒரு அங்கமான INDIAN TELEVISION AUDIENCE MONITORING TEAM ஆயிரம் வீடுகளுக்கு ஒரு வீடு என்று தேர்ந்தெடுத்து ஒரு கருவியை பொருத்தும். அந்த வீடுகளில் பார்க்கும் நிகழ்ச்சிகளை கணக்கில் கொண்டே டி.ஆர்.பி ரேட்டிங் என்பது முடிவாகும்.
எந்தெந்த வீடுகளில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது ரகசியமாக இருக்கும்.
இங்கேதான் அர்ணாபு தன் செல்வாக்கை பயன்படுத்துகிறார். என்ன இருந்தாலும் அவர் மோடியின் செல்லப் பிராணி அல்லவா!
கருவி பொருத்தப்பட்ட வீடுகளின் விபரம் அவருக்கு கிடைக்கிறது. அந்த வீடுகளுக்கு மாதம் ஒரு தொகை கொடுக்கப்பட்டு குடியரசு டிவியே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது போல ஏற்பாடு செய்கிறார்.
குடியரசு டிவி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மராத்தி சேனல்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
யப்பா, அர்ணாபு, தி நேஷனுக்கு நீ எப்படி ஃப்ராடு செஞ்சேன்னும் தெரியனும்.
அதுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தேன், உன் வழக்கமான காட்டுக்கத்தலோடு.
பிகு: ஒரு வீட்டுக்கு அர்ணாபு மாசம் ஐநூறு ரூபாய் கொடுப்பாராம். அந்த சனியனை சகிச்சுக்க லட்ச ரூபாய் கொடுத்தால் கூட தகும். இதுலயும் கூட அநியாயம்தான் செஞ்சிருக்காரு.
No comments:
Post a Comment