Friday, October 2, 2020

மாலன் எனும் ...……..

 


அயோக்கியன் என்பதா?
தரகன் என்பதா?
விஷப்பாம்பு என்பதா?
காசுக்காக எதையும் செய்யும் கூலி என்பதா?
பொய்யன் என்பதா?
வதந்தி பரப்புபபவன் என்பதா?
மத வெறியன் என்பதா?
தேச பக்தி போர்வையில் வெறியை கிளப்பும் விஷமன் என்பதா?
மட்டமானவன் என்பதா?

 எப்படியும் சொல்லலாம். எல்லாவற்றையும் சொல்லலாம்.

 அத்வானி உள்ளிட்ட கிரிமினல் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்புக்கு பத்து புள்ளிகளோடு வியாக்னம் செய்து டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளதாம்.  

 அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ள மாலன் அதிலே சொல்லப் பட்டுள்ள ஏழாவது பாயிண்ட் குறித்து ஆழ்ந்து ஜிந்தித்தாராம்.

 பத்து பாயிண்டுமே அபத்தம் என்பதால் அதை வெளியிட்டு எனக்கானது போல உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க நான் விரும்பவில்லை. 

 அந்த ஏழாவது புள்ளியையும் மாலனின் ஜிந்தனையையும் மட்டும் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

 அசம்பாவிதம் நடக்கக் கூடும் என்ற 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 2 தேதியன்று உளவுத்துறை அளித்த அறிக்கையும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகளும் அந்தக் கோயில் நகரில் நுழைந்திருக்கிறார்கள் என்ற 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையும் விசாரிக்கப்படவில்லை

 இதில் ஏழாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் என் சிந்தனைகளைத் தூண்டுகிறது. இத்துடன் சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க ஒத்திகை நடந்ததாக 'இதுவரை காணாத படங்கள்என்று நேற்றுத் தீர்ப்பிற்குப் பின் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்களையும் இணைத்து யோசிக்கும் போது சில கேள்விகள் பிறக்கின்றன

 1.அந்தப் படங்களில் இருப்பவர்கள் யார்? கர சேவகர்களா, அல்லது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகளா?

 

2. அந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டன? அவை ஏன் சம்பவம்  நடந்த காலத்திலோ, வழக்கு நடந்த போதோ வெளியிடப்படவில்லை. அல்லது சிபிஐயிடம்  ஒப்படைக்கப்படவில்லை?

 3. அவற்றை இப்போது வெளியிடுவதற்குப் பின் உள் நோக்கங்கள் உள்ளதா?

 4, கல்லெறி சம்பவம் கரசேவகர்களிடையே வேறுசக்திகள் ஊடுருவியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறதா?

 1.பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோதிகள்

 மாலனின் இந்த அயோக்கியத்தனமான, ஆபாசமான, மட்டமான, கேவலமான பதிவிலிருந்து நான் புரிந்து கொள்வதெல்லாம்

 நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட கிரிமினல்களை விடுவித்ததோடு மட்டும் நிற்கவில்லை. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேச விரோதிகள்தான் மசூதியை இடித்தார்கள், இந்த உத்தம புத்திரன்கள் எல்லாம் மசூதியை காப்பாற்றத்தான் பார்த்தார்கள் என்றும் நிறுவும் சதியையும் அரங்கேற்றியுள்ளது.

பல வருடங்களாக இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்ற படங்களை புதியதாக உலாவுவது என்று சொல்வது மிகப் பெரிய அயோக்கியத்தனம்! மிகப் பெரிய பொய். 

 ஜமுக்காளத்தில் வடி கட்டிய அந்த பொய்யை தமிழ்நாட்டில் பரப்பு இழிகுணம் கொண்ட மாலன் புறப்பட்டுள்ளார். அடுத்து எச்.ராசா போன்றவர்கள் கிளம்புவார்கள். இதற்கு மாலனுக்கு பேமெண்ட் எவ்வளவு ரூபாயோ?

 ரத யாத்திரை என்று ரத்த யாத்திரை சென்று நாடெங்கிலும் கலவரம் நடத்தியவர்கள், மசூதியை இடிக்க கடப்பாறை முதல் வெடி பொருட்கள் வரை கொடுத்தனுப்பியவர்கள், உச்ச நீதி மன்றத்துக்கு கொடுத்த உறுதி மொழியை காப்பாற்றாமல் காவல்துறையை வெறுமனே வேடிக்கை பார்க்க வைத்தவர்கள், டிசம்பர் ஆறு அன்று பாபர் மசூதி முன்பு குழுமி வெறியை கிளப்பும் பேச்சை பேசியவர்கள் எல்லாம் அப்பாவிகள், அவர்கள் மசூதி இடிப்பை தடுக்கத்தான் முயன்றார்கள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேச விரோதிகள்தான் இடித்தார்கள் என்று சொல்கிறார்கள் என்றால் மக்களை எவ்வளவு கேணையர்கள் என்று நினைக்கிறார்கள் பாருங்கள்!

 ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.

 56 இஞ்ச் மார்பு, வீராதி வீரன், சூரன் என்றெல்லாம் சங்கிகள் பீற்றிக் கொண்டாலும் அவர்களை விட பெரிய கோழைகள் யாரும் கிடையாது. நாங்கள்தான் இடித்தோம். தண்டனைக்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் தைரியமோ, நேர்மையோ இல்லாத கோழைகள், மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சாவர்க்கரின் வாரிசுகள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 கடைசியாக மாலனுக்கு இரண்டு கேள்விகள்.  (மரியாதைக்குறைவாகவே இருக்கும்)



 யோவ் மாலா, மசூதி இடிப்பை தடுக்கத்தான் சங்கிகள் முயன்றார்கள் என்றால் மசூதியை இடித்து முடித்த பின்பு, உமா பாரதி சந்தோஷத்தோடு முரளி மனோகர் ஜோஷி முதுகில் உப்பு மூட்டை ஏறிக் கொண்டது ஏன்? அவர்கள் ஒரு வேளை ஊடுறுவிய பாகிஸ்தான் ஆதரவு தேச விரோதிகளோ? சொல்லுய்யா மாலா!

 நாங்க, போலீஸ், ராணுவம் எல்லோரும் சேர்ந்துதான் ஒரு செங்கல் கூட இல்லாம இடித்தோம்னு அர்ஜூன் சம்பத் என்ற அடியாள் சொன்னதை கேட்டியா மாலா?

 அந்த வீடியோவை பாரு.



 அப்போ அர்ஜூன் சம்பத், ராணுவம், போலீஸ் எல்லோருமே பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேச விரோதிகள்தானே?


2 comments:

  1. என்ன இந்தாளு இவ்வளவு கீழ இறங்கிட்டான்!

    ReplyDelete
  2. மிகவும் ஆபத்தான சிந்தனை

    ReplyDelete