Friday, October 23, 2020

அக்கறையோடு ஒரு அறிமுகம்

  ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்னவேல் நடராஜன் ஐயா, வலைப்பக்கங்களிலும் முக நூலிலும் செயல்படுபவர்களுக்கு மிகவுமே பரிச்சயமானவர். அனைவரையும் எழுதுவதற்கு ஊக்கப்படுத்துபவர்

 “முற்றுகை” நூல் குறித்த அவரது அறிமுகத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். எல்.ஐ.சி நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது அக்கறை  என்னை மிகவும் நெகிழ வைத்தது.

 நன்றி ஐயா . . .

 


முற்றுகைவேலூர் சுரா

 

1980களில் AIIEA நடத்தியஇலக்கோ விஜில்” 

போராட்டம் குறித்த புனைவு

 

பாரதி புத்தகலாயம் வெளியீடு

முதல் பதிப்புஜனவரி 2019

விலை ரூ.80 – பக்கங்கள் 80

 

ஆயுள் காப்பீட்டு கழகம் பற்றிய புத்தகம்.

 ஆயுள் காப்பீட்டு கழகம் எப்படி தேசிய மயமாக்கப்பட்டது,

 கணினி மயமாக்கப்படுவது கல்கத்தாவில் எப்படி நிறுத்தப்பட்டது,

ஒரு காலகட்டத்தில் கணினியின் அவசியம் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஏன் நிறுவப்பட்டதுஅதற்கான அரசியல்போராட்டங்கள் பற்றி அருமையான நாவல்.

 புத்தகத்தை கீழே வைக்கத் தோன்றவில்லை.

 .சு.நல்லபெருமாள் (பாளையம் கோட்டைக்காரர்)  அவர்கள்  எழுதிய  போராட்டங்கள்  எனற நாவலைப்படிப்பது போன்ற உணர்வு.  

 ஆயுள் காப்பீட்டுக்கழகம் இவ்வளவு போராட்டங்களுக்குப் பின் வந்தது,

மறுபடியும் தனியார் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற பயம் இருக்கிறது.

 ஆயுள் காப்பீட்டுக்கழகத்தினால் அரசுத்திட்டங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கப்படுகிறதுஇவ்வளவும் தனியார் கைகளுக்குச் சென்று  பங்குச்சந்தையில் கொட்டி விடுவார்களோ  என்ற பயம் இருக்கிறது.

 அருமையான புத்தகம்.  

பாராட்டுகள் சார் திரு Swaminathan Raman

 நன்றி நண்பர்களே

1 comment:

  1. My salute to the encouraging soul.though criticism is required,encouragement is more required for any writer or artists.

    ReplyDelete