கீழே உள்ள காணொளியை முதலில் பாருங்கள்
மேலே உள்ள விளம்பரத்தைப் பார்த்தீர்களா? டாடா நிறுவனங்களில்
ஒன்றான “தனிஷ்க்” நகை நிறுவனத்தின் விளம்பரம் அது.
இந்தியில் இருந்ததால் இந்தி தெரிந்த ஒரு தோழருக்கு அனுப்பி
விபரம் அறிந்து கொண்டேன்.
“ஏகத்துவம்” அல்லது “ஒன்றிணைவது” என்ற அர்த்ததுடன் அவர்கள்
வெளியிடவுள்ள நகைகளுக்கான விளம்பரம் அது.
ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிற
தங்கள் மருமகளுக்கு வளை காப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இது போன்ற விழாக்கள்
நம் குடும்பங்களில் செய்வதில்லையே அம்மா என்று அந்தப் பெண் தன் மாமியாரிடம் கேட்க “மகளின் மகிழ்ச்சிக்காக
எதுவும் செய்யலாம்” என்று சொல்ல
“ஒற்றுமையாக இருந்தால் மேலும் வளரலாம்” என்ற வாசகத்தோடு
விளம்பரம் முடிகிறது.
இந்த விளம்பரம் சங்கிகளின் மனதை புண்படுத்தி விட்டதாம்.
இவர்கள் நீண்ட காலமாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்களே அந்த “லவ் ஜிஹாத்” என்பதை
ஊக்குவிக்கிறதாம்.
அதனால் “தனிஷ்கை புறக்கணிப்போம்” என்று ஆரம்பித்து குஜராத்தில்
ஒரு தனிஷ்க் கடையை வேறு காவிக் கயவர்கள் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
டாடா நிறுவனம் பயந்து விட்டது. மன்னிப்பு கேட்டு அந்த
விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது.
குடும்பத்துப் பெண்ணின் மகிழ்ச்சிக்காக புதிய மரபை
உருவாக்கலாம் என்ற அழகான செய்தியை சொன்ன ஒரு விளம்பரத்தை மத வெறிக் கண்ணோட்டத்தோடு
திரிப்பதெல்லாம் சங்கிகளால் மட்டுமே முடியும். பிரிவினையை தூண்டும் வெறியர்களுக்கு
“ஒற்றுமை” என்ற வார்த்தை கசக்கிறது.
கார்ப்பரேட்டுகள் அரசையே ஆட்டிப் படைக்கும் வல்லமை
கொண்டவர்கள். அவர்களே கூட காவிக் கயவர்களின் ரௌடித்தனத்திற்கு பயந்து போய்
விடுகின்றார்கள் என்றால் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
இன்னும் எத்தனை நாள் நாம் இந்த இருண்ட காலத்தை சகித்துக்
கொள்ளப் போகிறோம்?
பிகு : இந்தி விளம்பரத்தை எனக்கு விளக்கிய தோழர் சொன்ன ஒரு
தகவல் இது வரை நான் அறியாதது. வளைகாப்பு செய்யும் வழக்கம் என்பது தமிழக இஸ்லாமியக்
குடும்பங்களில் காலம் காலமாக உண்டென்றும் தன் மனைவிக்கும் முதல் குழந்தை
பிறப்பதற்கு முன்பாக வளைகாப்பு விழா நடத்தினோம் என்றார். கலாச்சாரங்கள் இணைப்பு
என்பது இதுதான். இயல்பான ஒன்று இது. ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயலும்
மூடர்களுக்கு இதெல்லாம் புரியாது.
No comments:
Post a Comment