"இலங்கைக் கச்சேரிக்கு போகட்டுமாடா தம்பி" என்று தன்னிடம் எஸ்.பி.பி கேட்டதாக சீமான் சொன்னதை வைத்து அவரை எல்லோரும் நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"இறந்து போனவர்களைப் பற்றி மட்டும் தான் கதை விடுவாயா" என்றும் கேட்கிறார்கள்.
வேண்டாம்.
சீமான் பற்றி அப்படி பேச வேண்டாம்.
இறந்து போனவர்களைப் பற்றி கதை விடுவதில் சீமானுக்கு முன்னோடி ஒருவர் இருக்கிறார்.
அவரும் திரைத்துறையிலும் இருக்கிற அழகியல் புனைவுக் காரர்.
இறந்து போனவர்களைப் பற்றி அவர் எழுதினால் அது முழுவதும் வன்மமாகவே இருக்கும். இறந்து போனவருக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நாலு அறை விட்டு விட்டு மறுபடியும் இறந்து போவார்.
இவர் உயிரோடு இருக்கும் வரை நாம் சாகக் கூடாது என்று கூட சிலர் பிரார்த்திப்பதாக ஒரு தோழர் முன்பு எழுதினார்.
இறந்து போனவர்களைப் பற்றி அவர் வன்மத்துடன் எழுவதைப் படித்தால் நமக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி நாம் மருத்துவரைப் பார்க்க ஓடுவோம்.
ஆனால் சீமான் சொல்வதை படித்தாலோ, அவர் காணொளியை பார்த்தாலோ "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்ற வாசகத்தின் படி மருத்துவரிடம் செல்வதை தவிர்ப்போம்.
ஆகவே அவருக்கு சீமான் பெட்டர்.
யார் அந்த அவர்?
தமிழின் தலைசிறந்த படைப்பாளியை, எந்த மொழியில் எழுதினாலும் அந்த மொழியின் முதன்மையான படைப்பாளியாக இருக்கக் கூடியவரை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையென்றால், உங்களிடம் "அறம்" இல்லையென்றே அர்த்தம்.
இந்த பாவச்செயலுக்கு பரிகாரமாக பத்து முறை வெண்முரசு படிக்கவும்.
No comments:
Post a Comment