சிதம்பரம்
தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர வைக்கப்பட்டதை பாஜகவின்
கேடி.ராகவன் கண்டித்துள்ளார்.
தந்தை
பெரியார் பிறந்த நாளுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து சொன்னது போல இதுவும் நல்ல
விஷயம்தான்.
அந்த ஊராட்சியில் நடந்தது போன்றதொரு
தீண்டாமைக் கொடுமை, ஜாதியின் அடிப்படையில் பாகுபாடு சங்கர மடத்திலும் நடந்துள்ளது
என்பதை கீழே உள்ள புகைப்படங்கள் உணர்த்தும்.
அப்பட்டமான ஜாதி மேலாதிக்கம் என்பதைத்
தாண்டி வேறொன்றும் இல்லை. இந்த அணுகுமுறை இப்போதும் மாறவில்லை
சிதம்பரம்
ஊராட்சி பிரச்சினையில் கண்டித்த அதே உணர்வோடு
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்
மக்கள் பிரதிநிதிகளில் சிலரை மட்டும் ஜாதிய பாகுபாட்டோடு தரையில் அமர வைக்கும் அராஜகத்தை
நடத்தும் சங்கர மடத்தையும் கேடி.ராகவன் கண்டிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
நீதி,
நேர்மை, நியாயம் எல்லாம் நிரம்பிய உத்தமர் கேடி.ராகவன் என்று அவரது கட்சிக்காரர் சிப்பு சேகரே சொல்லியுள்ளாரே!
எப்போ
கண்டன அறிக்கை விடப் போறீங்க கேடி.ராகவன்?
பிகு:
இதே கேள்வியை கேடி.ராகவனின் முக நூல் பக்கத்தில் கேட்டதற்காக வழக்கறிஞர் தோழர் பிரதாபன்
ஜெயராமன் அவர்களை சங்கிகள் ஆபாச வார்த்தைகளால் திட்டி தங்களின் தரத்தை நிரூபித்துக்
கொண்டது மட்டுமல்ல, தரையில் அமர வைக்கப் படும் இழிவை அவர்கள் மனமுவந்து ஏற்கும் அடிமை
புத்தியையும் வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
No comments:
Post a Comment