Monday, October 5, 2020

இன்னுமா உலகம் ரஜினியை நம்புது?

 


நேற்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றி வரும் போது கே டிவியில் 1999 ம் வருடம் வெளி வந்த ஜோடி திரைப்படம்  ஓடிக் கொண்டிருந்தது. காதலின் மகத்துவத்தை ரமேஷ் கண்ணாவிற்கு காதல் படங்களின் வீடியோக்களை காண்பித்து படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தும் தாமுவும் உணர்த்துவது போன்ற காட்சி அப்போது ஓடிக் கொண்டிருந்தது. 

நாட்டை ஆண்டவங்களே காதலிச்சிருக்காங்க என்று படகோட்டி படத்தில் ஒரு பாடல் காட்சியை காண்பிக்கும் இயக்குனர்,

நாட்டை ஆண்டவங்களோட காதலை பார்த்தே, நாட்டை ஆளப் போறவரும் காதலிச்சிருக்கார் பாரு என்று சொல்ல,

முத்து திரைப்படத்தின் தில்லானா தில்லானா பாடல் தோன்றும். 



நான் டிவியை அணைத்து விட்டேன்.

டுபாக்கூர் தாஸ் சொன்ன ஒரு செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள அவரது முக நூல் பக்கத்திற்குப் போனால் 

ரஜினிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.



அரசியலிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த தரகுப்புயல் த.அ.மணியன் கூட சில நாட்களுக்கு முன்பாக திராவிடக்கட்சிகளை ஒழிக்க ரஜினி நடத்தவுள்ள அறப்போருக்கு அவர் துணை நிற்கப் போவதாக அறிவித்திருந்தார்.

இன்னுமா ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார் என்று இந்த உலகம் நம்புகிறது?

2 comments:

  1. Rajini Oru kadanji edutha kozhai, kaadu vaa vaa 'nu solra vayasilaa avan arasiyal vandhu, katchi aarambichi, aatchiyai pidichu, kkizhinchudum.

    ReplyDelete
  2. அவர் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டார். போயஸ் கார்டனில் அவரது கார் செல்வதற்காக அப்போது வாய்ஸ் கொடுத்தார். அன்று ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த வெறுப்பில் ரஜினி குரல் கொடுக்காவிட்டாலும் தோற்கடித்திருப்பார்கள்.

    ReplyDelete