தலைப்பையும் மேலே உள்ள படத்தையும் பார்த்ததும் அது என்ன "ஆர்ய புர வடை" என்றொரு கேள்வி உங்களுக்கு வந்திருக்கலாம்.
ஒரு வேளை இந்தியப் பிரதமரை நக்கல் செய்வதற்கான குறீயீடோ என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.
அப்படியெல்லாம் நீங்கள் ரொம்பவும் மண்டையை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.
அது ஒரு ஊரின் பெயர்.
ஆமாம். செஞ்சி, சேத்துப்பட்டு சாலையில் வளத்தி தாண்டிய பின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஊரின் பெயர் "ஆரிய புர வடை"
அதற்கடுத்த ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பெயர் "வட வெட்டி"
பிகு : ஒரு வேளை மோடி இங்கே எல்லாம் பிரச்சாரத்திற்கு வந்திருப்பாரோ? பதினைந்து லட்ச ரூபாய், இரண்டு கோடி வேலை, விவசாய உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்கு கொள்முதல் விலை போன்ற வாக்குறுதிகளை இங்கே கொடுத்திருப்பாரோ?
அதனால்தான் இந்த பெயரோ?
இந்த ஊர்களுக்கு அடுத்த ஊரின் பெயர் நிஜமாகவே அழகு. பொலிவிய மக்கள் போல இந்திய மக்களுக்கு அது அவசியம் தேவை.
அந்த ஊரின் பெயர்
"ஞான உதயம்:
No comments:
Post a Comment