ஆசிபா கொடூரமாக கொல்லப்பட்ட போது “ இந்த சின்ன விஷயத்தை பெரிது
படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் பாதிக்கப் படும்” என்று திருவாய்
மலர்ந்தார் “போய்ச் சேர்ந்த அருண் ஜெய்ட்லி”
குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அப்போது ஆளும்
கூட்டணியில் இருந்த பாஜகவினர் ஒரு எம்.எல்.ஏ தலைமையில் தேசியக் கொடியை உயர்த்திக்
கொண்டு ஊர்வலம் போனார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸை நீதிமன்றத்திற்குள்
வர விடாமல் வக்கீல்கள் கலவரம் செய்தார்கள்.
உ.பி யில் ஹத்ராஸ் கொடூரத்தை “ஒரு சின்ன விஷயத்தை அரசியல்
ஆதாயத்திற்காக காங்கிரஸ் பெரிது படுத்துகிறது” என்று சொல்கிறார் மொட்டைச்
சாமியார்.
கைது செய்யப்பட்டவர்கள் சந்தீப், ராம், லவ்குஷ், ரவி என்ற
போதிலும் இரண்டு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தியை பரப்புகின்றார்கள்
காவிக்கயவர்கள்.
பிராம்மணர்கள், தாகூர்கள் என்று இரண்டு ஜாதியினர் சேர்ந்து
மகாபஞ்சாயத்து நடத்தி உள்ளார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை முற்றுகை
இட்டுள்ளார்கள்.
காவிகளை விடுதலை செய்வதற்காகவே புதிதாக சிப் பொறுத்தப்
பட்டுள்ள சி.பி.ஐ யிடம் வழக்கு சென்றுள்ளது.
அந்தப் பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று உ.பி
ஏ.டி.ஜி.பி முதலில் சொன்னார். முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையும் அவ்வாறே
சொல்வதாக இன்று காலையில் நாளிதழில் படித்தேன்.
அப்படி என்றால் அந்த பெண்ணின் சடலத்தை அவசரம் அவசரமாக
உறவினர்களை பூட்டி வைத்து நள்ளிரவில் எரிக்க வேண்டிய அவசியம் என்ன? மறு போஸ்ட்
மார்ட்டம் நடக்காமல் இருப்பதற்குத்தானே!
இதை அரசியலாக்காதீர்கள் என்கிறார் தமிழக பாஜகவின் பலியாடு
முருகன். அதே நேரத்தில் அவர் கட்சியின்
கன்னியாகுமரி மாவட்ட அமைப்போ “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த கொடுமையை
செய்ததாக “ போஸ்டர் ஒட்டி, பேனர் போட்டு
இழிவான பொய் அரசியல் செய்கின்றனர்.
இது எங்களுக்கு கொண்டாட்டம் என்று மோனிஷ் என்றொருவன் நேற்று காலையில்
பின்னூட்டம் போடுகிறான்.
நடந்த தவறை மூடி மறைத்து குற்றவாளிகளை பாதுகாக்க நினைக்கும்
அத்தனை அயோக்கியர்களுக்கும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.
இதை கேட்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு
பிரச்சினையின் தீவிரம் புரிய வேண்டுமென்றால் வேறு வழியில்லை.
“உங்கள் வீட்டுப் பெண்கள் இப்படி பாலியல் வன் கொடுமைக்கு
உள்ளானாலும் இது சின்ன விஷயம், அரசியலாக்காதீர், கொண்டாட்டம் என்று சொல்லி
குற்றவாளிகளை பாதுகாப்பீர்களா?”
உங்களால் பதில் சொல்ல முடியாது.
ஆனால் எங்களால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்.
அப்போதும் நீதி கேட்டு உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.
பிகு : இரக்கமே இல்லாத சங்கிகளுக்கும் அவர்களை மூளையே இன்றி ஆதரிப்பவர்களுக்கும் மேலே உள்ள படத்தை இன்னொரு முறை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அந்த படம் இறந்து போன மனிஷாவின் உடைக்கப்பட்ட முதுகெலும்பு
No comments:
Post a Comment