Saturday, October 3, 2020

மருந்து குடிக்கையில் குரங்குகளை நினைக்காதே

 


எங்கள் கோட்டச்சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் எம்.தசரதன் ஒரு வாட்சப் குழுவில் கீழேயுள்ள காணொளியை பகிர்ந்து கொண்டு



 “இது வெறுமனே ஒரு நகைச்சுவை காணொளி மட்டுமே… நீங்களாக எந்த இரண்டு பேரையாவது கற்பனை செய்து கொண்டு ஏயென்றோ ஓயென்றோ சிரிக்கக் கூடாது”

 என்று வேறு சொல்லியிருந்தார்.

 ஒரு நோய்க்காக வைத்தியரிடம் சென்ற நோயாளியை சோதித்துப் பார்த்த வைத்தியர் மருந்தைக் கொடுத்து விட்டு “உனக்கு சீக்கிரம் குணமாகி விடும். ஆனால் மருந்தைக் குடிக்கும் போது மட்டும் குரங்கை நினைக்கக் கூடாது” சொன்னாராம். அந்த நோயாளி மருந்தை கையிலெடுத்தாலே குரங்குதான் மனக்கண் முன் வந்ததாம். அதனால் அந்த நோயாளி மருந்தையும் குடிக்கவில்லை. நோயும் குணமாகவில்லை.

 அந்த குறிப்பு இல்லாமல் இருந்திருந்தால் அது வெறும் நகைச்சுவைக் காட்சியாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் இப்போது பாருங்கள், நாற்காலிக்காக இப்போது மோதிக் கொண்டிருக்கிற இருவர் மட்டுமல்லாமல் அவர்களுக்கு அந்த பதவியையும் கொடுத்த சமாதி சபத அம்மையார் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.

 இன்னொரு கமெண்டையும் சொல்லாமல் இந்த பதிவை முடிக்க இயலாது.

 தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் பதில்

 “தமிழ்நாட்டு அரசியல் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லைஎன்று தெலுங்கானாவில் உள்ள நம்புகிறோம்”

 அங்கே யார் மோதிக் கொள்கிறார்களோ?

 பீகாரில் நிதீஷ் குமார், ராம் விலாஸ் பஸ்வானுக்குக் கூட பொருத்தமாக இருக்கிறதல்லவா!

 

 

No comments:

Post a Comment