Thursday, October 15, 2020

பாவம் ரஜினி, மறந்து விட்டார்

 


தன்னுடைய ராகவேந்திரா மண்டபம் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்ததால்   சொத்து வரியிலிருந்து விலக்கு வேண்டுமென்று போட்ட வழக்கை, நீதி மன்றத்தின் நேரத்தை விரயமாக்கிய  காரணத்திற்காக அபராதம் விதிக்கவா  என்று கேட்டவுடன் ரஜினி அந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

 இந்த கொரோனா காலத்தில் இந்த ராகவேந்திரா மண்டபம் குறித்து ஏதோ எழுதியுள்ளோமே என்ற கேள்வி மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.

 தேடிப் பார்த்தேன்.

 04.05.2020 என்று எழுதிய பதிவு கிடைத்தது.

 அந்த பதிவை அப்படியே மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு அளித்தால் ?



சென்னை மாநகராட்சி அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் கீழே உள்ளது போல ஒரு நோட்டீஸை அனுப்புகிறது.



இச்செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தின் உரிமையாளர் திருமதி லதா ரஜினிகாந்த் ஒரு செய்திக் குறிப்பை ஊடகங்களுக்கு அனுப்புகிறார்.

"பராமரிப்பு வேலைகளுக்காக ராகவேந்திரா மண்டபம் மூடப் படுகிறது. மூன்று மாதங்களுக்கு திருமணங்களுக்கு முன் பதிவு நிறுத்தப் படுகிறது."

ஒரு துளி வியர்வைக்கு  ஒரு பவுன் தங்கக்காசு அளித்த தமிழக மக்களுக்கு சில நாட்கள் கூட தன் மண்டபத்தை அளிக்கத் தயாரில்லை. வருமானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று மண்டபத்தையே மூன்று மாதம் மூடி வைக்க முடிவெடுக்கும் நபர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேறு சிலர் ஆசைப்படுகின்றார்கள்.

என்ன கொடுமை தமிழா இது!

 

 ஆக கொரோனா வார்டு அமைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு வேலை என்ற பெயரில் மண்டபத்தை பூட்டி வைத்தது ரஜினிகாந்தே தவிர கொரோனா அல்ல.

 கொரோனா வார்டு பயன்பாட்டுக்கு தன் மண்டபத்தை தராமல் சென்னை மாநகராட்சியை எமாற்றிய அதே ரஜினிகாந்தே பின்பு  கொரோனாவை காரணம் காட்டி அதே சென்னை மாநகராட்சியை வரி விலக்கும் தரச் சொல்கிறார்.

 பாவம் ரஜினிகாந்த், தான்தான் மண்டபத்தை பூட்டி வைக்கச் சொன்னோம் என்பதை மறந்து விட்டார் போல . .  .

 என்ன செய்வது! அவருக்கும் வயதாகி விட்டதல்லவா! ஞாபக மறதி சகஜம்தானே!

 இப்படிப்பட்ட உடல் உபாதைகள் உள்ளவரைப் போய் அரசியலுக்கு வா, கட்சி ஆரம்பி, முதலமைச்சராகு என்று நிர்ப்பந்தம் கொடுத்து அவரது ரசிகர்கள் சித்திரவதை செய்கிறார்களே!

 அரசியலுக்கு வந்து மக்களை ஏய்ப்பவர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு வராமலேயே ஏய்ப்பதை மட்டும் சரியாக செய்பவராக ரஜினிகாந்த் உள்ளார்.

 இவர் அரசியலுக்கு வந்தால்  தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

 

கடைசி செய்தி : ஒரு வழியாக ரஜினிகாந்த் கர்னாடகா வங்கி, காசோலை மூலமாக சொத்து வரியை கட்டி விட்டாராம். வங்கிக் கணக்கில் இருப்பு இருக்கும் என்று நம்புவோம். அப்படியே அந்த ஆஷ்ரம் பள்ளி வாடகை பாக்கியையும் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய பாக்கியையும் கொடுத்திட்டீங்கன்னா நல்லா இருக்கும்.








பிகு : மண்டபம் வெறும் 250 சதுர அடி அளவில்தான் கட்டப்பட்டுள்ளதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு பஞ்சாயத்தும் ஓடிக் கொண்டிருக்கிறது. அது பற்றி நமக்கென்ன? எடப்பாடியாச்சு! ரஜினியாச்சு!

No comments:

Post a Comment