Wednesday, October 7, 2020

இதுதாண்டா மோடியின் புள்ளி விபர ஃப்ராடு



 மோடியை பெரிய ஆள் என்று காண்பிப்பதற்காக அவரே ஏராளமான ஸ்டண்டுகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார். அவரே நீண்ட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்று காண்பிப்பதற்காக அவர் முதல்வராகவும் பிரதமராகவும் இருந்த நாட்களை கணக்கிட்டு அவர்தான் டாப் என்று போட்டுள்ளார்கள்.



இது என்ன மோசடி வேலை?

ஒன்று பிரதமராக இருந்த காலத்தை மட்டும் போட வேண்டும். 

அல்லது

முதல்வராக இருந்த காலத்தை மட்டும் போட வேண்டும்.

அப்படி முதல்வர், பிரதமர் என்று இரண்டையும் இணைக்கிற போது பிரதமர்கள் பட்டியலோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் முதல்வர்கள் பட்டியலையும் சேர்த்துப் போட வேண்டும்.

ஆனால் அப்படி போட்டால் எந்த பதவியிலும் நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் என்ற வரையறையில் மோடி வர மாட்டார்.

பிரதமர் என்று தனியாக எடுத்தால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இவரை விட அதிகமான நாட்கள் ஆட்சியில் இருந்தவர்கள்.

முதல்வர் என்று எடுத்துக் கொண்டால் இவர் முதல்வராக இருந்த நாட்களை விட அதிகமான நாட்கள் முதல்வராக இருந்தவர்கள் பட்டியல் மிகவும் பெரிது. 29 பேர் இவரை விட அதிகமான நாட்கள் முதல்வராக இருந்துள்ளனர் (நம் தமிழகத்தின் கலைஞர், ஜெயலலிதா உட்பட)

இவருடைய பிரதமர், முதல்வர் இரண்டையும் சேர்த்தால் கூட ஏழு முதல்வர்களுடைய ஆட்சிக்காலம் (தோழர்கள் ஜோதிபாசு, மாணிக் சர்க்கார் உட்பட) இவரை விட அதிகம். 

வேண்டுமானால் இந்த இணைப்பில் சென்று விபரங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த ஒரு பீற்றல் ஒன்று போதும் இவர்கள் எதற்கும் துணிந்த மோசடிப் பேர்வழிகள் என்பதும் வாய் திறந்தால் பொய்யைத் தவிர வேறு எதுவும் வராது என்பதற்கும். 

பிகு 1 : மோடியை உசத்தியா காட்ட சங்கிங்க என்னதான் ரூம் போட்டு யோசிச்சு பொய் சொன்னாலும் அந்த பொய்க்கு எப்போதுமே அல்பாயுசுதான். ஆனாலும் வெட்கங்கெட்டுப் போய் அடுத்த கட்டுக்கதையை அவிழ்த்து விடுவாங்க.

இந்த பொழைப்புக்கு சங்கிங்க தண்டவாளத்துல தலையைக் கொடுக்கலாம். 

பிகு 2 : அடுத்த பொய் நாளை அம்பலமாகும் 


No comments:

Post a Comment