ஆஜானின் லீலைகள் தொடர்பாக வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஆனால் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமில்லாத புளிச்ச மாவு ஜெமோ, இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப் படாமல் "எண்ட் கார்டே இல்லாத" நாய் சேகர் "த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா" என்று பயணத்தை தொடர்வது போல அடுத்த இலக்கை நோக்கி பயணித்து அவரை நாம் அடிப்பதற்கான கண்டெண்டை கொடுத்துக் கொண்டே இருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
ஆமாம். ஆஜானின் வாலும் நிமிராது.
ஒரு பாக்கெட் புளிச்ச மாவும்,
சட்டை கிழியாத சண்டையும் அதனூடே ஒரு வழக்கும் !
***********************************
அதாகப்பட்டது,
இந்த பூமியில் கல் தோன்றா,
மண் தோன்றா, கடல் தோன்றா காலத்திலே
குமரிக்கடலோரம் ஒரு அறிவு ஜீவி தோன்றினார்!
கல்லும், மண்ணும் இல்லாத காலத்தில் குமரி என்ற நிலப்பரப்பு மட்டும் எப்படி தோன்றியிருக்கும் என கேள்வி எழுப்புவர்கள் கீரை ஆயக்கூட தகுதியற்றவர்கள் என அந்த அறிவு ஜீவி ஆயான் தனது தத்துவ விளக்க கேள்வி பதிலில் முன்னொரு காலத்தில் விளக்கியிருக்கிறார்.
அறம் என்ற வார்த்தைக்கு ஒட்டுமொத்த குத்தகையும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்படாத காப்புரிமையும் எங்கள் ஆயானின் வசம்!
ஆயானுக்கு ஒரு பழக்கம் உண்டு..
ஆயான் நடக்கிறார், நிற்கிறார்..ஓடுகிறார்..டீ குடித்தார், மாவு பாக்கெட் வாங்கினார், டெலிபோன் எக்ஸேஞ்சில் சண்டைபோட்டார் ...என எப்போதும் மாரத்தான் போல தன்னை லைம் லைட்டில் வைத்து ஓட்டிக்கொண்டிருப்பார்.
அது லைம் லைட் என அவர் நினைத்தாலும், அது பல ஆண்டுகளுக்கு முன்பே மாண்டில் நொறுக்கப்பட்ட பெட்ரமாக்ஸ் லைட் என யாருமே ஆயானிடம் சொன்னதில்லை.
அப்படி சொன்னால் ஆயானின் கொலைப்பழியை சுமக்க வேண்டியிருக்குமே என்ற பெரும் பயம்தான்!
ஆயானின் வாசகர்கள் தனி வார்ப்புகள்..
அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது ஆயானுக்கு மட்டுமே அறிந்த ரகசியம்!
மாதத்தின் பாதி நாட்கள் ஆயான் அடுத்தவர்களை வம்பிழுக்கவே நேரம் போதாது!
ஆனாலும் ஆயான் தானே கேட்டு தானே எழுதி தன் உள்ளக்கிடக்கையை உலகிற்கு வெளிக்கொண்டுவர கக்குவார்!
ஆயானுக்கு ஒரு பழக்கம் உண்டு..அது தான் ஆயானை நமக்கு அடிக்கடி கண்டெண்ட் கொடுக்க வைக்கும் பழக்கம்.!
ஆயானுக்கும் அற்ப மனிதர்களின் அன்றாட நிகழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்பதால், ஆயான், அவரின் கற்பனையோட்டத்தில் கொஞ்சம் கொடூரமாக யோசித்து கொலைபழியை தனக்கு வேண்டாத நபர்களின் மீது எழுதிவிடுவார்!
ஆயானின் ரைட்டப் வந்துவிட்டால், ஆயானின் படை ஆஹா..ஓஹோ..ஆமாம் போடு ..அப்படி போடு.. என பாட்டுபாடி ஆட..
ஆயானோ வின்னர் படத்தில் வரும் வடிவேலு போல இன்னுமடா இந்த ஊர் நம்மை நம்பிட்டிருக்கு என தனக்குத்தானே கேட்டுக்கொள்வார்!
ஆயானின் திறமைக்கு ஞானபீடமெல்லாம் தூசு...
ஒரு பிரபஞ்ச எழுத்தாளரை ஒரு சின்ன பெட்டிக்குள் அடைத்திட முடியுமா?
அதனால்தான் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சட்டை கிழியாத சண்டையில் சிகிச்சைக்கு சேர்ந்த போதுகூட,
அவருக்கு தனித்த சிகிச்சை அளிக்க ரிச்சர்ட் பீலேவினை வரவைக்க மருத்துவர்கள் முயன்றார்கள்!
ஏனென்றால், உங்களுக்கு ஒன்னுமில்லை சார் என அங்குள்ள டாக்டர்கள் சொன்னால், நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என வாழும் வசிஸ்டர் சாபமிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான்!
No comments:
Post a Comment