இருண்ட காலத்தில் ஒளிக்கீற்றாய் கிடைத்த செய்தி. தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தால் மக்களின் நம்பிக்கையை பெற்று நாட்டின் ஜனாதிபதி அளவிற்கு உயர்ந்தவர் இவா மொரேல்ஸ். கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான அவரது அரசை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையாக முயன்றது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்ற போதும் முறைகேடுகள் என்று குற்றம் சுமத்தி, ராணுவத்தை வைத்து அவரை பொலிவியாவை விட்டு வெளியேற வைத்தது. வலது சாரிகள் கையில் ஆட்சி சென்றது.
இதோ இப்போது நடைபெற்ற தேர்தலில் இவா மொரேல்ஸின் சோசலிசத்துக்கான இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது.
இவா மொரேல்ஸ் ஆட்சிக்காலத்தில் அவருடைய நிதியமைச்சராக இருந்த லூயிஸ் ஆர்க் புதிய ஜனாதிபதியாகிறார்.
உண்மையாகவே மக்களுக்கு உழைப்பவர்களை மக்கள் என்றும் கைவிட மாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.
பொலிவிய மக்களுக்கு பாராட்டுக்கள்.
No comments:
Post a Comment