போராட்டம்
நடத்துபவர்களை காவல் துறை இது நாள் வரை எப்படி நடத்தியுள்ளது என்பதற்கு கீழே உள்ள படங்கள்
சான்று.
"வன்முறையில்லா
தமிழகம், போதையில்லா தமிழகம்" என்ற முழக்கத்தோடு சென்னை நோக்கி இரண்டு குழுக்களாக வடலூரிலிருந்தும்
திருவண்ணாமலையிலிருந்தும் நடைப்பயணம் சென்ற
போது அவர்களை சென்னைக்குள் அனுமதிக்காது கைது செய்த போது கண்ணியமான முறையில் காவல்துறை
நடத்திய போது எடுத்த படங்கள் அவை.
பொதுவாகவே
அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கும் நடைமுறையும்
உள்ளது. வாயில் வைக்க முடியாத ஒரு சாப்பாட்டை தருவார்கள். எனக்கு அப்படிப்பட்ட அனுபவம்
இரண்டு முறை நடந்துள்ளது.
எட்டு
வழிச்சாலைக்கு எதிரான நடைப்பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போது தோழர் கே.பி, தோழர்
உ.வாசுகி உள்ளிட்ட தோழர்கள் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது போட்ட
மிளகாய் பொடி சோறு என்று ஒரு சிவப்பு நிற வஸ்துவின் படத்தை தோழர் இ.பா.சிந்தன் பகிர்ந்து
கொண்டது இப்போதும் நினைவில் உள்ளது.
ஆனால்
இன்று
தோழர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த புறப்பட்ட காவிச்சாயம் பூசிக்கொண்டும்
இன்னும் பெரியாரிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிற திருமதி குஷ்பு அவர்களுக்கு என்ன
விதமான கவனிப்பு தரப் பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த நாற்காலியே சொல்லும் அதை . . ..
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்
இந்த சிறப்பு கவனிப்பு?
ஏதோ
ஒரு திரைப்படம். பெயர் நினைவில் இல்லை. அதிலே இயக்கப்படும் ஒரு திரைப்படத்தின் நாயகியாக
ரம்பாவை பார்த்ததும் அதன் இயக்குனர் விவேக்கிடம்,
பார்த்திபன் புல்லரித்துப் போய் “சார்,
ரம்பா சார்” என்று வாயில் திரவம் வடிய சொல்வார்.
அது
போல யாராவது காவல்துறை அதிகாரி
“சார்,
குஷ்பூ சார்” என்று புல்லரித்து போய் சிறப்பு கவனிப்பு அளித்திருப்பாரோ?
இல்லை.
அவர் பூசியுள்ள காவிச்சாயத்திற்கும் காக்கிச் சட்டைக்கும் உள்ள ஆண்டான் அடிமை உறவுதான்.
இது
தொடர்பாக இரண்டு மீம் பார்த்தேன். நீங்களும் வாய் விட்டு சிரியுங்கள்
No comments:
Post a Comment