மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமாகி விட்டார். அவருக்கு என் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.
ஒரு சோஷலிஸ்டாக, ஒடுக்கப்பட்ட மக்களின் போராளியாக, அரசியல் வாழ்வை தொடங்கியவரின் அரசியல் வாழ்க்கை இறுதிக்காலத்தில் அதற்கு முற்றிலும் முரணான இடத்தில் முடிந்து போனது.
அவசர நிலைக் காலத்தில் சிறைப்பறவையாக இருந்தவர், 1977 தேர்தலில் ஹாஜிபூர் தொகுதியில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தவர்.
வி.பி.சிங், தேவே கௌடா, ஐ,கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங், மோடி என ஆறு பிரதமர்களின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் என்பதே அவர் பதவிக்காக இடம் மாறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்பதை உணர்த்தும்.
குஜராத் படுகொலைகளைக் கண்டித்து வாஜ்பாய் அரசிலிருந்து விலகியவர், அந்த குஜராத் படுகொலைகளின் முதல் குற்றவாளி மோடியோடே இணைந்து கொண்டது அவரது சீரழிவின் அடையாளம்.
இப்போது கூட அவரது கட்சி நிதிஷ் குமாரோடு மோதுகிறதே தவிர, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை ஆதரிக்கிறது.
வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் உச்சத்திற்கு சென்ற திரு ராம் விலாஸ் பஸ்வான், தன் கொள்கைகளிலும் செயல்களிலும் உறுதியாக இருந்திருந்தால் இன்னும் பெரிய அளவிற்கு வந்திருக்கலாம். அந்த ஆதங்கத்தை இப்போது சொல்லாமல் வேறெப்போது சொல்வது!
அஞ்சலி திரு ராம் விலாஸ் பஸ்வான்
No comments:
Post a Comment