கடந்த இரு பதிவுகள் சூடாக இருந்ததால் சற்றே இளைப்பாற . . .
ஒரு கடிதமும் பதிலும்
வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான ஒரு பதிவை தமிழில் தந்துள்ளேன்.
ஒரு வங்கி மேலாளர் ஓய்வூதியருக்கு அனுப்பிய கடிதம் கீழே
உள்ளது.
அன்புடையீர்,
பென்ஷன் பெறுவதற்காக தாங்கள் இந்த ஆண்டு உயிரோடுதான் இருப்பதாக
அளித்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றது. மிக்க நன்றி. தாங்கள் கடந்த வருடம் அளித்த
சான்றிதழ் காணாமல் போய் விட்டது. அதனை இந்த வருடம் ஆய்வுக்கு வந்த அதிகாரி தனது
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்களிடம் கடந்த ஆண்டு நீங்கள் உயிரோடு
இருந்ததற்காக அளித்த சான்றிதழின் நகல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அப்படி நகல்
இல்லையேல் தாங்கள் கடந்த வருடம் உயிரோடுதான் இருந்தேன் என்பதற்கு ஒரு சுய அறிக்கை (Self Declaration) அனுப்பி
வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஓய்வூதியரின் பதில்
மதிப்பிற்குரிய ஐயா,
நான் இந்த ஆண்டு உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கான சான்றிதழ்
கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. நான் கடந்த வருடம் உயிரோடுதான்
இருந்தேன் என்பதற்கான சான்றிதழின் நகல் என்னிடம் இல்லை. கடந்த ஆண்டு நான்
உயிரோடுதான் இருந்தேன் என்று ஒரு சுய அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தீர்கள்.
என்னுடைய கடுமையாக ஞாபக மறதி பிரச்சினை காரணமாக, நான் கடந்த ஆண்டு உயிரோடுதான்
இருந்தேனா என்பதை எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் நினைவுக்கு கொண்டு வர
முடியவில்லை. அதனால் என்னால் அவ்வாறு அறிக்கை தருவது இயலாமல் போய் விட்டது.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகர்யத்திற்கு வருந்துகிறேன்.
No comments:
Post a Comment