செத்துப்
போன சில காங்கிரஸ்காரர்களை மட்டும் செலக்டிவ்வாக சங்கிகள் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.
முன்பு வல்லபாய் படேல், இப்போது நரசிம்மராவ்.
இருவரும்
நேரு குடும்பத்துக்கு அவ்வளவாக வேண்டாதவர்கள் என்பது மட்டுமல்ல காரணம், இரண்டு பேருமே
சாஃப்ட் சங்கிகள் என்பதும் கூட முக்கியக் காரணம். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்பு
வேறு வழியில்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தாலும் பிறகு அந்த அந்த தடையை நீக்கியவர்
படேல்தான். அதனால்தான் அவருக்காக “ஸ்டேட்டுகே ஓப்பி யூனிட்டி” உருவாக்கினார்கள்.
நரசிம்மராவிற்கு
பதிலாக வி.பி.சிங் போல வேறு யாராவது பொறுப்பானவர்கள் பிரதமராக இருந்திருந்தால் பாபர்
மசூதியை இடித்திருக்க முடியாதல்லவா! அயோத்தி பிரச்சினையில் ராணுவத்தை கையில் வைத்துக்
கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த உத்தமனல்லவா அவர்!
அந்த
நன்றியை இப்படித்தான் வேறு பல காரணங்களை முன்வைத்து சொல்ல வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை
ஒரு மோசமான நிலைமைக்கு இட்டுப் போனவர்தான் நரசிம்மராவ் என்பதுதான் அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம்.
இன்னொரு
விஷயமும் உள்ளது.
பிகு:
நரசிம்மராவ் குறித்து சிலிர்த்து போய் சிலாகித்து இன்னொரு கட்சியின் தலைவரும் எழுதியுள்ளார்.
ஆமாம்.
அவர் மய்யத்தார்.
இந்தியாவின்
சிரிக்கா மனிதன் பற்றி நினைவுக்கு வரும் மூன்றாவது விஷயம் கூட ஒன்றுள்ளது.
அது
நாளை. . .
No comments:
Post a Comment