Wednesday, June 23, 2021

தாமினிக்கு நாலு செக்யூரிட்டி, ஆறு நாய்

 


 இரண்டு மூன்று நாட்கள் முன்பாக இணையத்தில் பார்த்தேன்.

 உலகின் அதி விலை உயர்ந்த மாம்பழ வகை ஜப்பானின் “மியாஸாகி” பழத்தை இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு தம்பதி வளர்க்கின்றனர். தங்களிடமுள்ள இரு மரங்களை பாதுகாக்க அவர்கள் நான்கு தனியார் பாதுகாவலர்களையும் ஆறு நாய்களையும் பயன் படுத்துகிறார்களாம்.

 அப்படி என்ன விலை அப்பழங்களுக்கு?

 வேலூரில் மல்கோவாவும் இமாம் பசந்தும் கிலோ 160 ரூபாய்.

பங்கனபள்ளி கிலோ ரூபாய் 60 அல்லது 70

செந்தூரா, நீலம் எல்லாம் கிலோ 60 ரூபாய்.

 ஆனால் இந்த மியாஸாகி ஒரு கிலோ இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரூபாயாம்.

 இவ்வளவு விலை கொடுத்து வாங்க அந்த பழத்தில் என்ன இருக்கிறது?

 கடலில் தன் வலையில் சிக்கிக் கொண்டது செந்தில் என்பது கவுண்டமணிக்கு தெரியும் முன்பு ஒவ்வொருவரும் “இதோட தோல் பல லட்சம், பல்லு பல ஆயிரம். கறி வெளிநாட்டுக்கு எவ்வளவு டிமாண்ட் தெரியுமா?” என்று சொல்வார்களே, அதே போல கண்ணுக்கு நல்லது, இதயத்துக்கு நல்லது, சருமத்துக்கு நல்லது என்று ஒவ்வொரு இணைய தளமும் ஒரு கதை சொல்கிறது. அநியாய ருசி வேறாம்!

 இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள்?

 வெளிநாட்டிலிருந்து தினசரி காளான் இறக்குமதி செய்து சாப்பிடுபவர்கள் இதையும் சாப்பிடுவார்கள்.

 நமக்கு மல்கோவாவும் பங்கன பள்ளியும் போதும்.

 அதென்ன தலைப்பில் தாமினி?

 ஒரு ரயில் பயணத்தில் அவர்களுக்குக் கிடைத்த மாங்கன்றை வளர்த்து வித்தியாசமான நிறத்தில் பழங்கள் வர அதன் ஒரிஜினல் பெயர் தெரியாத காரணத்தால் அவர்களே சூட்டிய பெயர் தாமினியாம்.

No comments:

Post a Comment