Friday, June 4, 2021

பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல நீதியரசர்களே!

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு அபூர்வமான தீர்ப்பை அளித்துள்ளது.

பத்திரிக்கையாளர் வினோத் துவா மீது பதியப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்

"அரசின் செயல்பாட்டின் மீது, ஆட்சியாளர்களின் நடவடிக்கை மீது மிகக் கடுமையான விமர்சனத்தை முன் வைப்பது தேசத் துரோகம் ஆகாது. தேசத்தின் அமைதியை வன்முறைச் செயல்கள் மூலம் சீர்குலைப்பதும், ஆட்சியை கடுமையாக கண்டிப்பதும் ஒன்றாகாது. அப்படி விமர்சனம் செய்பவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவது என்பதெல்லாம் சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் 1962 லேயே மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் வைத்ததற்காக பதிவு செய்யப்பட்ட தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்கிறோம்"

இதுதான் அந்த தீர்ப்பின் முக்கியமான சாராம்சம்.

கூடவே இன்னொன்றும் சொல்லியுள்ளார்கள்.

"தேசத் துரோக வழக்கு பதிவதிலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்"

என்றும் சொல்லியுள்ளார்கள்.

நீதியரசர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பணிவோடு சொல்ல வேண்டியுள்ளது.

இன்றைய ஒன்றிய அரசை நடத்தும் ஆட்சியாளர்கள் காட்டு மிராண்டிக் கூட்டத்தவர், மத வெறி பிடித்தவர்கள், பெரு முதலாளிகளுக்கு தரகு வேலை செய்யும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையுமே நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவராலும் கடுமையாக கண்டிக்கப்படும். அதற்கு எதிராக போராடுகிறார்கள்.

அதனால் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே பாதுகாப்பு தேவை என்பதையும் மனதில் கொண்டு உங்கள் தீர்ப்பின் வாசகங்களை கொஞ்சம் மாற்றுங்கள் சார். 

1 comment: