Tuesday, June 29, 2021

உருண்டைகள் ஓய்வதில்லை.

 


 

பொட்டுக்கடலை கொண்டு செய்த மாலாடு குறித்த பதிவை சில நாட்கள் முன்பாக எழுதியிருந்தேன். நெய் விளங்காய் என்று இதற்கு நெல்லையில் பெயர் என்றும் சொல்லியிருந்தேன்.

 ஆனால் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு இசக்கிராஜன், சிறு பருப்பில் செய்வதற்குப் பெயர்தான் மாலாடு, நெய் விளங்காய், ஆகவே இது செல்லாது செல்லாது என்று சொல்லி விட்டார்.

 சிறு பருப்பில் அதாவது பாசிப் பருப்பில் அதாவது பயத்தம்பருப்பில் செய்வதுதான் மாலாடு எனும் போது பொட்டுக்கடலை வைத்து செய்ததால் எங்கே நள தோஷம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பாசிப்பருப்பைக் கொண்டும் செய்து விட்டேன்.

 பாசிப்பறுப்பை வறுத்து, பொடி செய்து, அதை சலித்து பின் அதே அளவு சர்க்கரைக்குப் பதிலாக  வெல்லத்தையும் சேர்த்து மிக்ஸியில் ஓட விட்டு அந்த கலவை மீது வறுத்த முந்திரியையும் வறுக்க பயன்படுத்திய நெய்யோடு கொட்டி உருண்டை பிடித்தால் சுவையோ சுவை.

 


இந்த உருண்டையை திவசத்தன்று மட்டும்தான் செய்வார்கள் என்று நீண்ட காலம் நம்பியிருந்தேன் என்பது வேறு விஷயம். வெல்லம் போட்ட கோதுமை அல்வாவும் கூட.

 பிகு : மாலை வேளை காபிக்கு முன்பே ஒரு உருண்டை சாப்பிடுவது என்பது வழக்கமாகி விட்டதால் செய்தது என்பதுதான் நிஜம். உண்மை.

 

1 comment:

  1. எங்கள் இல்லங்களில் இதற்கு பெயர் பொடிவிலங்காய் உருண்டை. மாலை டீ சாப்பிடுவதற்கு முன்பாக முறுக்குடன் கொறிப்போம். நாங்கள் போஜனம் பிரியா. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete