Tuesday, June 22, 2021

மத்யமர் சங்கிகள் – மெடிக்கல் மிராக்கிள்

 



மத்யமர் குழுவைப் பற்றிய  முந்தைய பதிவொன்றில் “மத்திய, மாநில அரசும் பொதுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எப்போதும் வெறுப்பை கக்குவதையே கொண்டுள்ள உப குழு ஒன்றும் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தேன்.

 அப்படிப்பட்ட அரசு ஊழியர் எதிர்ப்பு துணைக்குழு உறுப்பினர் ஒருவர் அரசு ஊழியர்களுக்கு 30 % ஊதியம்தான் வழங்கப்பட வேண்டும் என்று முதலில் எழுதியிருந்தார். இன்றைக்கு 33% என்ற அளவில் சில அலுவலகங்களில் பணிக்கு செல்வது என்பது அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு கட்டுப்பட்டுதான்.  அவர்கள் செய்ய வேண்டிய வேலையை நாளை அவர்கள்தான் கூடுதல் நேரம் எடுத்து செய்யப் போகிறார்கள். ஏற்கனவே பணி நேரம் என்பதையெல்லாம் கடந்துதான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஓவர் டைம் என்பதெல்லாம் கிடையாது. இப்போது ஊதியத்தை குறைத்தால் நாளை கூடுதல் நேரமெடுத்து வேலை பார்க்கும் போது அதற்கு ஊதியம் கொடுங்கள் என்று கேட்பார்களா இவர்கள்?

 ஏன் இப்படி எழுதுகிறார்கள்?

 இரண்டு காரணங்கள்.

 அந்த வேலை கிடைக்காமல் “சீ! சீ! இதெல்லாம் புளிக்கும்” என்று விரக்தியில் புலம்பும் திராட்சை கிட்டாத கிழ நரிகள்.

 இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்.

 ஊதியத்தை வெட்டச் சொன்னவர் அடுத்து வேலையை விட்டு தூக்க வேண்டும் என்று அடுத்த பதிவை எழுதியவுடன் கடுப்பாகி  “அரசு ஊழியர்களை எல்லாம் சுட்டுக் கொன்று விடலாம்” என்று ஒரு பின்னூட்டம் போட அதற்கு இன்னொரு சங்கி போட்ட பதிலை பாருங்கள்.




நாம் கடுப்படிப்பதைக் கூட புரிந்து கொள்ளாத அளவிற்கு வெறி ஏறியுள்ளதே என்பதால் அடுத்து இன்னொரு பின்னூட்டமும் போட்டேன்.

 


அதன் பின்பு இன்னொரு சங்கி “மாநில அரசு ஊழியர்களை மட்டும்” என்று சொல்கிறது.

 


மொத்தத்தில் சங்கிகள் என்று ஒரு தனி இனம் உண்டு. அந்த ஜந்துக்கள் ஒரு மெடிக்கல் மிராக்கிள்.

 மூளை, இதயம் என்ற இரண்டு உறுப்புக்களும் இல்லாமலேயே உயிர் வாழ்கிறார்களே!

 பிகு: அரசு அலுவலகங்கள் உண்மையில் மோசமாக இயங்குகிறதா? ஊழல் தலை விரித்தாடுகிறதா?  பொதுத்துறை வங்கிகள் நுகர்வோரை அலட்சியப்படுத்துகின்றனவா?

 ஒரு சமீபத்திய அனுபவத்தை நாளை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment