Thursday, June 10, 2021

காணிப்பாக்கத்தில் காசு வெட்டுங்கள் சங்கிகளே!

 குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பதிவு கேரள மாநில பாஜகவின் பரிதாப நிலையை அம்பலப்படுத்துகிறது.

தலைப்புக்கான காரணத்தை பின் குறிப்பில் சொல்கிறேன்.



ஙொப்புரானெ சத்தியமா நான் காவல் காரன்..

கேரள அரசியலில் இது வரை கண்டிராத #அரசியல் #ஆணையிடல்..

அட, ஆமாங்க..

கடந்த கேரள மாநில சட்ட மன்ற தேர்தலில், மாநில பாஜக தலைவர்(குழல்பணம் புகழ்)கே. சுரேந்திரனை தோற்கடிக்க உள்ளடி வேலைகளை செய்ததாக புகார் சென்றதைத் தொடர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட காசர்கோடு பாஜக தொண்டர் அடிப்பொடிகள், கோவில் ஒன்றில், கடவுளின் முன்னிலையில் #சத்தியம் #செய்த நிகழ்வு, உண்மையாகவே பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்பதை நிரூபித்து விட்டது..

புகழ்பெற்ற #கானத்தூர் #நால்வர் #பூதஸ்தானம் என்ற கோவிலில், அந்த பகுதி மக்கள் தங்களது நேர்மையை நிரூபிக்க கடவுளின் முன்னால் #சத்தியம் செய்து தங்களை #யோக்கியர்கள் என்று நிரூபிப்பது வழக்கம்...

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவர்,#குழல்பணம் #புகழ், #கே.#சுரேந்திரன் தோற்பதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட, ரவீந்திரன், நாராயண பட், A.N.சிவகுமார் ஆகியோர் கடவுள் சன்னிதியில் தயாராக வந்து நின்றனர்..

வழக்கப்படி, கோவில் நிர்வாகம், குற்றம் சுமத்தியவர்களையும், குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் உட்கார வைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்...

ஆனால், சமரசம் ஏற்படாத காரணத்தால் வழக்கப்படி, இவர்கள் கடவுளின் மீது ஆணையிட்டு தங்களை யோக்கியர்கள் என்று நிரூபித்துக் கொண்டனர்...

#கானத்தூர் #நால்வர் #பூதஸ்தானம் சன்னிதியில் #பொய்யான #ஆணையிட்டால், அவர்கள் #அழிந்து #போவார்கள் என்று நம்பப்படுகிறது....

கேரள அரசியல் வரலாற்றிலேயே,தங்களது சொந்த கட்சியின் தலைவரை, தாங்கள் தோற்கடிக்கவில்லை என்பதை நிரூபிக்க, அதே கட்சி தலைமை, கடவுளின் முன்னால் சத்தியம் வாங்கி, தங்களது கட்சி வித்தியாசமான கட்சி என்பதை நிரூபித்துள்ளது என்று, அரசியல் நோக்கர்கள் வியந்து போய் கிடக்கிறார்கள்...

பிகு 1 : சில வருடங்கள் முன்பாக வேலூர் நகரெங்கும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. ஏதோ ஒரு குடும்பப் பிரச்சினை. "காணிப்பாக்கம் வினாயகர் கோயிலில் (ஆந்திராவில் சித்தூருக்கு முன்பாக உள்ளது) காசு வெட்டிப் போட தயாரா?" என்று ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்திற்கு சுவரொட்டி மூலம் சவால் விடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. கேரள சங்கிகள் இந்த முறையையும் கூட முயற்சிக்கலாம்.

பிகு 2 : இந்த பதிவுக்காக சுரேந்திரன் படத்தை தோழரது பக்கத்திலிருந்து நகல் எடுக்க மீண்டும் சென்ற போது இன்னொரு விரிவான பதிவை பார்த்தேன். அப்பதிவு நாளை

No comments:

Post a Comment