ஜெயமோகனை
ஏங்க எப்பப்பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க என்று ஒரு தோழர் அவ்வப்போது கேட்பார்.
என்ன
செய்வது?
உடல்
முழுக்க கொழுப்பை வைத்துக் கொண்டு தான் மட்டுமே பெரிய அப்பாடக்கர் போல பக்கம் பக்கமாக
அளந்து விடுவதை படித்தால் கோபம் வருகிறதே!
தமிழக
அரசு அறிவித்துள்ள இலக்கிய மாமணி விருது குறித்து ஜெயமோகன் எழுதிய இரண்டு பதிவுகளை
மட்டும் ரொம்பவும் கஷ்டப் பட்டு படித்தேன். இன்னும் கூட எழுதிக் கொண்டே இருக்கிறார்.
நான் அவற்றை எல்லாம் படிக்கவில்லை.
இரண்டு
காரணம் இருக்கிறது.
எங்கே
அவற்றை எல்லாம் படித்து எழுதினால் “நீ ரொம்ப வெட்டியா இருக்கியா?” என்று பலரும் கேட்பதற்கான
அபாயம் இருக்கிறது.
அது
மட்டுமல்ல ஆஜான் கட்டுரைகளை படிக்கும் அளவிற்கு
இவனுக்கு தெம்பு இருக்கிறதே என்று கொரோனா தொற்று
மீண்டும் பிடித்துக் கொள்ளுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.
அவரது
கட்டுரையின் சில பகுதிகளின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை மட்டும் தருகிறேன். அதிலே அவர் விதைக்கும்
வில்லங்கத்தையும் சொல்கிறேன்.
இலக்கிய
மாமணி விருது இணையத்தில் கூச்சலிடும் திமுகவைச்
சேர்த்த இலக்கிய மொன்னைகளுக்கே கிடைக்கும் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? தங்கள் கட்சிக்காரர்களுக்காக
மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டம் இது.
இந்த விருது பெறும் யாரும் தகுதியானவர்கள் கிடையாது என்ற தோற்றத்தை விருது அறிவிப்பு
வரும் நாளே உருவாக்குகிறார்.
யாருடைய
எழுத்து மொன்னை, யாருடைய எழுத்து கூர்மை என்று நிர்ணயம் செய்ய இவர் யார்? இவர் கட்டுரைகளும்
கதைகமுமே படிக்க முடியாத பாடாவதிதான்.
இந்த
பட்டியல் மூலம் இவர்களும் திமுகக்காரர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்
ஜெமோ. சரி இவர்கள் எல்லாம் திமுக சார்பு கொண்டவர்கள் என்று சொல்லும் ஜெமோ தான் பாஜக
சார்பு கொண்டவன் என்ற உண்மையை பேசுவதே இல்லை.
தன்னைத்
தவிர மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படுபவர்கள்
என்று கிசுகிசு பேசுவது ஜெயமோகனின் இயல்புதான். அந்த சேடிஸ புத்திதான் இப்போதும் வெளிப்படுகிறது.
ஜாதிய
மோதலை தூண்டி விடுபவனை எல்லாம் திட்டாமல், தாக்காமல் கொஞ்சவா முடியும்!
சாகித்ய
அகாடமி விருதை ஏற்கும் படி அவ்வமைப்பின் மையப் பொறுப்பில் இருக்கும் இவரது நண்பர்கள்
பல முறை கோரினார்களாம். இவர் மறுத்து விட்டாராம். வைரமுத்து அறிவிக்கப்பட்ட விருதைத்தான்
திரும்பத் தருவதாகச் சொன்னார். பெறாத விருதை அவர் எப்படி திரும்பக் கொடுத்தார் என்று
அவரை போட்டுத் தள்ளி விட்டார்கள்.
ஆனால்
ஆஜானோ விருது அறிவிப்பதற்கு முன்பே ஏற்க மறுத்து விட்டாராம். சீ சீ இந்த மாவு புளிக்கும்
என்ற நரியின் கதை போலவே இருக்கிறதல்லவா? சாகித்ய
அகாடமி ஒரு விசாரணை நடத்தி ஜெமோவை விருதை ஏற்கச் சொன்ன அந்த மையப் பொறுப்பாளர்கள் யார்
என்பதை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசின்
முன் கொஞ்சம் கூட பணிந்து நிற்க முடியாதஅளவிற்கு ஆணவம் இவருக்கு இருப்பதாகச் சொல்கிறார்.
அரசின் முன் சிறிய அளவு கூட பணிய முடியாத அளவு ஆணவமுள்ள ஜெமோவிற்கு கமலஹாசன், மணிரத்னம்,
முருகதாஸ், ஷங்கர் போன்ற திரைப்பிரபலங்களிடம் வளைந்து கொடுக்கிற பணிவு உள்ளது பற்றி
நமக்கு கவலை இல்லை.
ஆனால்
விருது பெறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அரசிடம் பணிந்து போகிறவர்கள், இவரளவிற்கு
கொள்கைப்பிடிப்பு இல்லாதவர்கள் என அனைவரையும் டேமேஜ் செய்வது எப்படி சரியாக இருக்க
முடியும்? விஷ்ணுபுரம் விருது என்ற பெயரில் இவர் ஒவ்வொரு வருஷமும் ஒரு விருது தருகிறாரே,
அதை பெறும் படைப்பாளி இவரிடம் பணிந்தே அதை பெறுகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியுமா?
இப்போது
சொல்லுங்கள்,
ஜெயமோகன்
தொடர்ந்து தாக்கப்படுவது நியாயம்தானே?
மேலே
உள்ள படத்தில் இருப்பது போல நங்கு நங்கு என்று நாலு குத்து குத்தினாலும் தவறில்லை என்ற
உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டு விட்டது.
இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் ப்ளாக்கில் எழுதிக் கொண்டிருப்பதே சாதனைதான்
ReplyDelete