இளையராஜா
இசையமைப்பாளராகி 45 ஆண்டுகள் நிறைவுற்றதாக சில நாட்கள் முன்பாக பலரும் பதிவிட்டிருந்தனர்.
ராஜாவின்
45 ஆண்டுகளை 45 பாடல்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். பிரபலமான 45 பாடல்கள் என்பதற்குப்
பதிலாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முக்கியமான பாடல் என்று தொகுக்க விரும்பினேன். இது வரை
நான் பகிர்ந்து கொள்ளாத பாடல்களாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டேன். ராஜா
முதலில் பதிவு செய்த “அன்னக்கிளியே உன்னை தேடுதே தவிர பெரும்பாலானவை இந்த வலைப் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளப்படாத பாடல்கள். அதனால் கொஞ்சம் தாமதமான பதிவு இது. அவருடைய பிறந்த நாளன்றாவது
பகிர்ந்து கொள்வேமே என்று இன்று பகிர்ந்து கொள்கிறேன்.
2005
க்குப் பிறகு ராஜாவிற்கு ஒரு சரிவு இருந்தது என்பதை இப்பதிவுக்கான தரவுகளை தேடுகையில்
தெரிந்தது. சில வருடங்களில் சொல்லிக் கொள்ளும் படி ஒரு தமிழ்ப்ப் பாடல் கூட இல்லாததால்
அந்த வருடங்களை அப்படியே கடந்திருப்பேன்.
45
வருடங்களிலிருந்தும் பாடல்கள் வேண்டுமென்று திட்டமிட்டாலும் அது இயலாமல் போய் விட்டது.
அதை ஈடு செய்ய சில பின்னணி இசை கோர்வைகளையும் சேர்த்தேன். ஆனால் அதிகபட்ச அளவு தாண்டி விட்டது என்று ப்ளாக்ஸ்பாட் சொன்ன காரணத்தால் தேர்வு செய்து வைத்திருக்கிற பின்னணி இசைக் கோர்வைகளை நாளை பதிவு செய்கிறேன். அளித்துள்ளேன்.
நம்
காலத்தின் மகத்தான இசை மேதை இளையராஜா என்பதை வருடங்கள் கடந்த பின்பும் நிற்கும் அவரது
பாடல்கள் உணர்த்துகின்றன. பின்னணி இசையில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும்
கூட. . . .
மேலே பகிர்ந்து கொண்ட படம் எங்கள் புதுவை 2 கிளை தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி வரைந்தது.
இசையென்ற இன்ப வெள்ளத்தில் நீங்கள் மூழ்குவீர்கள் என்பதற்கு நான் கேரண்டி
1976 அன்னக்கிளியே உன்னைத் தேடுதே
1977 வாழ்வே மாயமா?
1978 – ஒரு வானவில் போலவே
1979 – அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
1980 – கொத்த மல்லி பூவே
1981 – கூந்தலிலே மேகம் வந்து
1982 – பூவே, இளைய பூவே
1983 – இசை மேடையில், இன்ப வேளையில்
1984 – ரோஜா ஒன்று
1985 – ராஜா மகள், ரோஜா மலர்
1986- இளஞ்சோலை பூத்ததா?
1987 – சின்ன சின்ன ரோஜாப்பூவே
1988 – தேன் மொழி, எந்தன் தேன் மொழி
1989 – பூங்காற்று உன் பேர் சொல்ல
1990 – குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதடி
1991 – பூங்காவியம், பேசும் ஓவியம்
1992 – யாரும் விளையாடும் தோட்டம்
1993 – தில்லுபரு ஜானே – தில்லு தீவானே
1994 – மலைக்கோயில் வாசலிலே
1995 – உல்லாச பூங்காற்றே
1996 – என் பாட்டு என் பாட்டு
1997 - தீபங்கள்
பேசும் இது கார்த்திகை மாதம்
1998 – மாலை என் வேதனை கூட்டுதடி
1999 - ஊருக்கு தெக்கே
2000 – நிலவு பாட்டு நிலவு பாட்டு
2001 – மஞ்சள் பூசும் மாலை வேளை
2002 – ஒளியிலே தெரிவது
2003 – இளங்காத்து வீசுதே
2004 – கொம்புல பூவை சுத்தி
2005 - காற்றில்
வரும் கீதமே
2009 – ஓம் சிவோஹம்
2010 – தாலாட்டு கேட்க நானும்
2011 – பூவக் கேளு, அந்த காத்தை கேளு
2012 – என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
2016 இடர் வரினும் . . .என் உள்ளம் . . .
2020 – உன்ன நெனச்சு நெனச்சு
தங்களின் பேருழைப்பு வியக்க வைக்கிறது நண்பரே
ReplyDeleteஅருமையான தொகுப்பு தோழர்
ReplyDelete