Monday, June 7, 2021

ஏமாந்துட்டிங்களே முன்னாள் ஜட்ஜய்யா . . .

 


முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே சரியான ஏமாளியாக இருக்கிறார். 

தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு

சதாசிவம் மூன்றே நாளில் ஆளுனரானார். 

தீபக் மிஸ்ரா பத்து நாளில் நியமன எம்.பி ஆனார்.

இவரும் மோடிக்காக முக்கியமான தீர்ப்புக்கள் கொடுத்தவர். ஓய்வு பெற்று நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் அடுத்த பதவி வரவில்லை.

இவரோடுதான் இன்னொரு நீதிபதியும் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். அருண் மிஸ்ரா என்று பெயர்.

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு பாத்திரத்திற்கு அல்லக்கையாக ஒரு பாத்திரம் வரும். "சார் ஸ்பீக்ஸ் சிக்ஸ் லேங்குவேஜஸ் இன் தெலுங்கு" என்று சொல்லும்.

அது போல ஒரு உச்ச நீதிமன்ற நிகழ்விலேயே

"மோடி உலக அளவில ஜிந்திச்சு லோக்கல் லெவல்ல செயல்படுத்துவார்" என்று புகழாரம் செலுத்தியவர் அருண் மிஸ்ரா.

அது மட்டுமல்ல மின் கட்டண விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் தன்னுடைய கடைசி தீர்ப்பில் அதானிக்கு எட்டாயிரம்  கோடி ரூபாய் ஆதாயம் தேடித்தந்தவர்.

அவர் இப்போது மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

நீங்க ஏமாந்துட்டீங்களே பொப்டே!

பிகு: நீதியரசர்கள் ரங்கநாத் மிஸ்ரா, ஜே.எஸ்.வர்மா ஆகியோர் இருந்த இடத்தில் இந்த மோடி மோகி. 

விளங்கிடும்

No comments:

Post a Comment