சரவணபவன், அடையார் ஆனந்த பவன் போன்ற ஹோட்டல்களில் மாலாடு என்ற பெயரிலும் திருநெல்வேலி பக்கம் நெய்விளங்காய் உருண்டை என்ற பெயரிலும் தயாரிக்கப்படும் வஸ்துவை இன்று தயாரிக்கும் போது அளவு,விலை போன்ற அம்சங்களை குறித்து வைத்துக் கொண்டேன்.
கால் கிலோ பொட்டுக்கடலையை வறுத்து அது ஆறிய பின்பு இருநூறு கிராம் சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடி செய்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்துக் கொண்டேன். ஐம்பது கிராம் முந்திரியை ஐம்பது மில்லி நெய்யில் வறுத்து அப்படியே அதை மாவில் கொட்டி கை சுட சுட உருண்டை பிடித்தால் மாலாடு தயார்.
நான் எடுத்துக் கொண்ட அளவும் செலவும் கீழே
பொட்டுக்கடலை கால் கிலோ முப்பது ரூபாய்சர்க்கரை இருநூறு கிராம் எட்டு ரூபாய்
முந்திரி ஐம்பது கிராம் முப்பது ரூபாய்
நெய் ஐம்பது மில்லி இருபத்தி ஐந்து ரூபாய்
உழைப்புக்கு இருபது ரூபாய்
கேஸ் மற்றும் மிக்ஸி ஐந்து ரூபாய்
மொத்தம் நூற்றி பதினெட்டு ரூபாய்
இந்த அளவிற்கு எனக்கு இருபத்தி ஐந்து பீஸ் வந்தது.
ஒன்றின் விலை ரூபாய் 4.72.
மேலே சொன்ன பெரிய ஹோட்டல்களில் இருபது ரூபாய் என்று விற்கிறார்கள். எங்கள் ஊர் ஹைவேக்களில் உள்ள சில கடைகளில் சிறிய பிளாஸ்டிக் ட்ப்பாவில் ஆறு பீஸ் 90 ரூபாய் என்று ஒரு பீஸ் 15 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
கொஞ்சம் மெனக்கெட்டால் அநியாய விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment