Friday, June 11, 2021

நல்ல முன்னெடுப்பு - அமைப்புக்கும் அமைச்சருக்கும்

 இளம் எழுத்தாளர் தோழர் அ.கரீம் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நல்லதொரு முயற்சியை மேற்கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கும் அதனை தக்க முறையில் எதிர்கொண்டு உறுதியளித்துள்ள தமிழ்நாடு அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.





கலை இலக்கிய பண்பாட்டுத் செயல்பாட்டில் எப்போதுமே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் களச் சூழலில் இருந்து துரிதமான நடவடிக்கை எடுக்கும் அந்த வகையில் இன்று மிக முக்கியமான முன்னெடுப்பாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான ஒரு கோரிக்கை கூட்டத்தை ஏற்பாடு செய்ததில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரும் பண்பாட்டு துறை அமைச்சருமான மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் பங்கேற்றார்கள்.

பேசும் ஒவ்வொரு கலைஞர்களின் கோரிக்கையும் மிகப் பொறுமையாக சுமார் இரண்டரை மணி நேரம் குறிப்புகள் எடுத்தபடி அவர் முழுமையாக கலந்து கொண்டார்.

தமிழக நாட்டுப்புற கலைகளின் மீது பேரார்வம் கொண்ட கலை செயல்பாட்டாளர் அன்னம்.டீ. ப்ருயின் கலந்து கொண்டார். அவர் பேசும் போது

"நான் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தாவள் அங்கே இருந்த நாட்டுப்புற கலைகள் அனைத்தும் யாரும் கவனிக்காததினால் அழிந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அப்படி அல்ல இயல் இசை நாடகம் என்று பரம்பரியமாக செயல்படும் மாநிலம் ஆனால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு என்று ஒரு தனிப்பல்கலைகழகம் இதுவரை இல்லை. இந்த கொரனோ காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களின் நிலை மிக மோசமாகிவிட்டது " என்று பேசினார். இப்படி ஒவ்வொருவரின் பேச்சையும் மிக கவனமாக குறிப்பெடுத்தவர் அடுத்த வாரமே பண்பாட்டு துறை கூட்டம் கூடி போர்க்கால அடிப்படையில் சில முடிவுகள் உடனடியாக எடுக்கப்படும் என்று கூறினார். (கடந்த பத்து ஆண்டுகளாக பண்பாட்டு துறை கூட்டம் கூடவே இல்லை என்பது பிரதிநிதி ஒருவர் கூறினார் ).

கூட்டத்தில் பங்கேற்ற நாட்டுபுற கலைஞர்கள் பலரின் வாழ்வும் கேட்க கேட்க மிக மோசமாக இருந்ததை உணர முடிந்தது. அதை அமைச்சரும் ஏற்புரையில் குறிப்பிட்டார். உங்களுக்கு என்ன தேவை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளவும், எனது வாட்சப்பில் கூட தகவல் அனுப்புங்கள் நான் உங்கள் தோழன் என்பதை நினைவில் வைத்து உரிமையோடு பேசுங்கள் " என்று நாட்டுப்புற கலைஞர்களுக்கு பெரும் நம்பிக்கையை அமைச்சர் விதைத்து உள்ளார்.

தமுஎகச வரலாற்றில் இன்றைய கூட்டம் மிக முக்கியமான நிகழ்வு.

சரியான காலத்தில் மிக சரியான கோரிக்கையை முன்னெடுத்தார்கள் நாடகவியலாளர் பிரளயன், பேரா. காளிஸ்வரன், பூபாலம் பிரகதீஸ்வரன், மதுக்கூர் ராமலிங்கம் ஆதவன் திட்சாண்யா உள்ளிட்ட தோழர்கள்.

No comments:

Post a Comment