சட்டமன்ற கூட்டத் தொடங்கிய நாளன்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் ரவிக்குமார், ஆளுனரின் அணுகுமுறையைக் கண்டித்து ஒரு பதிவெழுதியிருந்தார்.
இந்த பதிவைக் கண்டு வெகுண்ட மூமூமூமூத்த்த்த்த்த்த்த மாலன், ஆளுனருக்கு ஜால்ரா அடித்து, ஆளுனர் உரையை உங்கள் கட்சி(இதில் திமுக என்று சொல்லி அவரது குதர்க்க புத்தியை வேறு காண்பித்தார். ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் நின்றார் என்பதை ஞாபகப் படுத்துகிறாராம்) புறக்கணிக்குமா? என்று கேள்வி வேறு எழுப்பினார்.
மாலனை கேள்வி கேட்ட ஒருவருக்கு இதுதான் அவரது பிழைப்பு என்று நான் பதில் சொல்லி இருந்தேன்.
அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஆளுனர் உரையை புறக்கணித்து வெளி நடப்பு செய்து வந்ததும் அந்த புகைப்படத்தை (முகப்பில் உள்ள படம்தான்) அதே பதிவில் மாலனின் பின்னூட்டத்திலேயே போட நினைத்தேன்.
ஆனால் அந்த பின்னூட்டம் அங்கே இல்லை.
வெட்கப்பட்டு நீங்களே நீக்கிட்டீங்களா மாலன்?
உங்களுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எல்லாம் இருக்கிறதா என்ன?
No comments:
Post a Comment