*நாளொரு கேள்வி: 06.01.2022*
தொடர் எண் : *585*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
###########################
*கஜகஸ்தான் தெருக்கள் எல்லாம் மக்கள் தலைகள்*
கேள்வி: கஜகஸ்தானில் ஒரே அமளி துமளியாய் இருக்கிறதே!
*க.சுவாமிநாதன்*
கஜகஸ்தான் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாடு. வடக்கே ரஷ்யா, கிழக்கே சீனாவை எல்லைகளாக கொண்டது. *தெருக்கள் முழுவதும் போராட்டக்காரர்கள் தலைகள்* தென்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
விமான நிலையம், அரசு செயலகம், பல அரசு அலுவலகங்கள் எல்லாம் போராட்டக் காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கின்றன. 33 காவல் வாகனங்கள் உட்பட 120 வாகனங்கள் தீக்கிரையாகி உள்ளன. 400 வணிக கூடங்கள் தாக்கப்பட்டுள்ளன. *எமர்ஜென்சியை* அதிபர் பிரகடனம் செய்துள்ளார். அமைச்சரவை பதவி நீக்கத்திற்கு ஆளாகியுள்ளது.
*கேஸ் விலை* உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு லிட்டர் கேஸ் இந்திய ரூபாய் மதிப்பில் 10.20 லிருந்து ரூ 21 க்கு கிடு கிடு என உயர்ந்திருக்கிறது. 100% விலை உயர்வு. 90 சதவீத வாகனங்கள் கேஸ் மூலம் ஓடுகிற நாட்டில் மக்கள் மத்தியில் கோபம் வருவது இயல்புதான். 2019 இல் இருந்தே விலையை சந்தை தீர்மானிக்கும், மின்னணு வர்த்தகத்திற்கு நகரும் என்ற கொள்கை நிலை நோக்கி அரசு செல்ல ஆரம்பித்தது. அதன் உச்ச கட்ட தாக்கத்தைத்தான் அந்த தேசம் இன்று சந்தித்து வருகிறது.
ஆனால் இப் போராட்டத்தின் *வேர்கள்* கேஸ் விலை உயர்வை விட ஆழமானது.
*ஒன்று,* உலக மயக் கொள்கைகளின் தோல்வி. சந்தை தீர்மானிக்கும் என்றால் மக்கள் நலன் பறி போகும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
*இரண்டாவது,* வருமானம் மீதான தாக்குதலாக மக்கள் பார்க்கிறார்கள். சராசரி வருமானம் ரூ 35000 ஆக உள்ள அந்த நாட்டில் எங்கள் வருமானத்தை ரூ 2,00,000 ஆக உயர்த்துங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.
*மூன்றாவது,* அங்குள்ள பொருளாதார நிலைமைகளின் மீதான குவி கோபம் (Pent up anger) ஆகும் இது. பெரும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகியுள்ள சூழலில் அதன் விளை பொருளாக இந்த கோபம் அமைந்துள்ளது.
ஆகவே கஜகஸ்தான் அனுபவம் எல்லா நாடுகளுக்குமே பாடம்தான்.
என்றாலும் இன்னும் கூடுதல் செய்திகளுக்காக காத்திருப்போம். வேறு பரிமாணங்கள் உண்டா என்பதையும் ஆய்வு செய்வோம்.
*செவ்வானம்*
Kazaksthan protests are justified. But russia and murderer putin (role model for modi) is helping kill unarmed citizens.
ReplyDelete